சென்னை சர்வதேச விமான நிலையம் இந்திய அளவில் இருக்கக்கூடிய முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின், எண்ணிக்கை கடந்த 20 மேல் ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் அதிகரித்து வருகின்றன.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அதிகரித்து வருவதால், கூடுதல் பயணியர் விமானம் மற்றும் சரக்கு விமானங்களை கையாளுவதில் வருங்காலத்தில் சிக்கல் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. என சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம், அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து ஆராயப்பட்டன. இறுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தன.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பல அரசியல் கட்சியை சார்ந்தவர்களூம் போரட்ட களத்தில் கலந்து கொண்டு தாங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்
சமீபத்தில் கூட தமிழக வெற்றிக்கழத்தின் தலைவர் விஜய் அவர்கள் தனது முதல் அரசியல் போராட்டத்தை போராட்டக்காரர்களுடன் தன் எதிர்ப்பை தெரிவித்து போராடி அச்செய்தி பேசும் பொருளானது
பரந்தூர் விமான நிலைய திட்ட மதிப்பு என்ன?
மறுபுறம் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு திட்ட செலவு 29,150 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு அரசின் ‘டிட்கோ’ நிறுவனம் மூலமாக இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பரந்தூர் விமான நிலையம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் மொத்தமாக இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளன. சுமார் 3,700 ஏக்கர் நீளம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அமைச்சகத்திற்கு விண்ணப்பித்த ‘டிட்கோ’
ஒரு இடத்தில் புதியதாக விமான நிலைய அமைக்கப்பட வேண்டும் என்றால் பல்வேறு கட்ட அனுமதிகளை பெற வேண்டும் என்பது விதிகளாக இருந்து வருகிறது.
பரந்தூர் விமான நிலையம் இடம் தேர்வு செய்யப்பட்டதற்கு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் முதலில் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் துறை பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு அனுமதி அளித்தது.
முக்கிய அனுமதிகள் கிடைத்த பிறகு திட்ட அனுமதி பெறுவதற்காக, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்தது. இதனைத் தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து ஆணையம் திட்ட அனுமதியை நேற்று வழங்கியுள்ளது. இதனால் பரந்தூர் விமான நிலையம் கட்டுமானம் பணி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தகவல்
அடுத்த நிலைப்பாடு?
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு இட அனுமதி மற்றும் திட்ட அனுமதி தற்போது கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக, விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும், கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை தமிழக அரசு விரைவில் துவங்க உள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கான முதல் கட்ட கட்டுமான பணிகளை அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணிகள் நிறைவடைவது எப்போது
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டால், 2028-ஆம் ஆண்டுக்குள் முதற்கட்ட பணிகளில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் சென்னை இரண்டாம் நிலையத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கிறது.
-ப.மணிகண்டன்