மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட
சின்ன இரும்பாடி பகுதியில், வைகை ஆற்றங்
கரையில், மயானத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக அங்கிருந்த மரங்களை வெட்டி எடுத்து சென்றதாகவும், இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் எங்களுக்கே தெரியாமல் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு அதிகாரிகள் முயற்சி எடுத்துள்
ளதாக கூறியதாகவும் ஆகையால், மயானத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரி
வித்துள்ளனர்.
இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட
சின்ன இரும்பாடி மயானத்தில் இருந்து, வாடிப்பட்டி பகுதிக்கு
குடிநீர் கொண்டு செல்லும் வகையில், குடிநீர் மேல்நிலை
நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு செய்து, நேற்று மாலை இரும்பாடி மயான பகுதியில்
உள்ள மரங்களை வெட்டியும், ஜேசிபி எந்திரம் மூலம் இடங்களை
சமம் செய்தும் பணிகளை தொடங்கி இருந்தனர். இதனை அறிந்த கிராம மக்கள் பத்துக்கு மேற்பட்டோர் விரைந்து வந்து மயானத்தில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டக்கூடாது, ஏற்கனவே,
10 ஆண்டுகளுக்கு முன்பு அருகிலேயே குடிநீர் மேல்நிலை
நீர் தேக்க தொட்டி ஒன்று உள்ளது.
அந்த தொட்டி கட்டும்
போதே ,
நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தோம் எதிர்ப்பை மீறி கட்டி உள்ளனர் .
தற்போது, இரண்டாவது குடிநீர் தொட்டி
கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்
கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. பாரம்பரியமாக இரு சமுதாய மக்கள் இறந்தவர்களை இந்த மயானத்தில் தான் வைத்து தான் இறுதி சடங்குகள் செய்து வருகிறோம். இந்த இடத்தில் குடிநீர் தொட்டி கட்டினால்,
மத ரீதியாக எங்களை புண்படுத்தும் ஆகையால் இந்த இடத்தில் குடிநீர் தொட்டி கட்டக்கூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து, இரும்பாடி ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது, குடிநீர் தொட்டி கட்டும் முடிவு ஊராட்சி நிர்வாகத்
திற்கு தெரியாமல், எடுக்கப்
பட்டுள்ளது.
இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்டால், சென்னையில் இருந்து அதிகாரிகள் முடிவு செய்து பணிகளை தொடங்
கியுள்ளதாக தெரிவிக்
கின்றனர் என, தெரிவித்தார். திமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்
சிலரிடம் கேட்டபோது, அவரும் இந்த பணிகள் குறித்து
தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். ஆகையால், மக்கள் பிரதி
நிதிகளுக்கு தெரியாமல், மயானத்தில் உள்ள மரங்களை வெட்டி குடிநீர் தொட்டி கட்டுவதற்காக பணிகளை தொடங்கியுள்ள அதிகாரிகளுக்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்
தவுடன் சிறிது நேரத்தில் பணிகளில் ஈடுபட்டிருந்த வாகனங்களை எடுத்துக்
கொண்டு பணியாளர்கள் சென்று விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து, முறையாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாகவும், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தனர்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply