திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்கள் பல ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர் எளாவூர் சோதனைச் சாவடியில் இருசக்கர வாகனம் மற்றும் அரசு போக்குவரத்து பேருந்துகளில் ஆந்திர மாநில பேருந்துகளிலும் கஞ்சா கடத்தும் நபர்கள் பிடுபடுவது வாடிக்கையாகி வருகிறது. இவ்வளவு இருந்தும் கும்மிடிப்பூண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர் பள்ளி கல்லூரி ஏரிக்கரைகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் விற்பனை செய்வது வாடிக்கையாகி வருகிறது சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் போதைப்பொருள் விற்பனைகுறித்து தகவல் தெரிவித்தால் ரூபாய் 10 ஆயிரம் வெகுமதி என்று அறிவித்துள்ளார் இது மிகவும் வரவேற்கத் தகுந்தது ஆனால், தகவல் தெரிவித்த அவர் தொலைபேசி எண் ரகசியமாக வைக்கப்படுமா? என்று தெரியவில்லை. ஏனெனில் தகவல் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளூர் போலீசார் அல்லது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் ஏனெனில் உள்ளூரில் கஞ்சா விற்பதை தடுக்க முடியாத காவல்துறையினர் இதற்குப் பல காரணங்கள் சொல்லலாம் பதிவெண் இல்லாத இரண்டு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களில் உரிய பர்மிட் இல்லாத காரணங்கள்.., கும்மிடிப்பூண்டிக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து பல வழிகளில் வாகனங்கள் வருவதை தடுக்க முடியாத நிலை தற்பொழுது! பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக கஞ்சா வியாபாரிகள் முழு முயற்சி செய்து வருகின்றனர் எனவே முழு வீச்சில் சோதனைச் சாவடிகள் அமைத்து இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணித்தால் மட்டுமே கஞ்சா கடத்தலை சப்ளையை ஒழிக்க முடியும். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.அவர்கள் மட்டுமல்ல நாமும்தான். என்ன செய்யப்போகிறார் வருண்குமார் ஐபிஎஸ்!
– லட்சுமி ஆறுமுகம்
Leave a Reply