கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுனன்(50). இவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு ஆண் ,ஒரு பெண் பிள்ளை. இதில் இரண்டாவது பிள்ளையாக பிறந்தவர் அபிதா(24). இவர் தற்போது நர்சிங் படித்து விட்டு அருகில் உள்ள நகரத்திற்கு வேலைக்குச் சென்று வருகிறார். இந்நிலையில் அபிதா ஒருவரை கடந்த ஐந்தாண்டுகளாக காதலித்து வருவதாகவும் அது குறித்து குடும்பத்தினருக்கு தெரிய வந்த நிலையில், தந்தை அர்ச்சுனன் பலமுறை எச்சரித்து காதலை கைவிட மறுத்து வந்து, அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொலை நடந்த அன்று வாக்குவாதம் முற்றி அர்ச்சுனன் அரிவாளால் அபிதாவின் தலையில் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார். கொலை செய்த அர்ஜுனன் நேரடியாக காவல் நிலையத்தில் ஆஜராகி சரணடைந்த நிலையில், போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
- ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்