காஞ்சிபுரம்- மாஜி கவுன்சிலருக்கே அரிவாள் வெட்டு … பயத்தில் பொதுமக்கள்…

காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோவில் மாட வீதியைச் சேர்ந்தவர் தான்  கண்ணபிரான் 60 வயதான   இவர் காஞ்சிபுரம் மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர். தற்போது அ.தி.மு.க., வட்ட செயலராக பதவி அளித்து வருகின்றார்

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த  சரவணன் என்பவரும் பழகி வந்துள்ளனர். கடந்த 2016 ல், மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியான போது கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்துள்ளது.

ஆனால் அப்போது தேர்தல் நிறுத்தப்பட்டதால், அடுத்த பல ஆண்டுகள் தேர்தல் நடக்காத நிலை ஏற்பட்டது  இந்த நிலையில் தான்  2022ல் 9 வது வார்டில், நடந்த மாநகராட்சி தேர்தலில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த சரவணனுக்கு கவுன்சிலர் சீட்  கிடைக்கவில்லை

இதை தொடர்பாக   வட்டச் செயலாளர்  கண்ணபிரானுக்கும், சரவணனுக்கும் இடையே பிரச்னை  ஏற்பட்டுள்ளது
சில ஆண்டுகளாக   இருவருக்கும் வாக்குவாதம்
சிறிய அளவிலான பிரச்னைகள் இருந்ததாக தெரிவித்தனர்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தன் வீட்டின் முன் அமர்ந்திருந்த பேசிக் கொண்டிருந்தபோது  கண்ணபிரானை அங்கு வந்த சரவணன் திடீரென அரிவாளால் வெட்டத் தொடங்கினார்  
கண்ணபிரான் ஓடியும் தான் விட்டீன் உள்ள சென்றபோதும் அவரை விரட்டி விரட்டி வெட்டி உள்ளார்
இதில் உடல் முழுவதும்   பல இடங்களில் காயம் ஏற்பட்டது
மருத்துவமனையில், கண்ணபிரான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சரவணனை  பிடித்து சிவகாஞ்சி போலீசிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில்
காஞ்சி மாநகரில் சொந்தக் கட்சியினரையே இப்படி பழிக்குப் பழி தீர்க்கும் பொழுது பொது மக்களாகிய எங்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது என்ற பகுதி மக்கள் அச்சத்தில் வாழும் நிலை தள்ளப்பட்டுள்ளது

  • பா.மணிகண்டன்