தேனி மாவட்டம் ஆளுங்கட்சி தி.மு.க வின் எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் மகன் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் மனு:- மதுரை தெப்பக்குளம், மாரியம்மன் கோவில் தேங்காய் கடையில் தேங்காய், பழம் வாங்கிவிட்டு பணம் தராமல் தகராறு செய்ததாக கூறப்படும் ஆளுங்கட்சி தி.மு.க பாராளுமன்ற உறுப்பினரின் மகன் மீது வழக்கு பதிவு செய்ய கோரியும், பாதிக்கப்பட்டு புகார் கொடுத்த தேங்காய் கடை உரிமையாளர்களான தந்தை மகன் மீது பொய் வழக்கு செய்து சிறையில் அடைத்தும் முக்கிய ஆதாரங்கள், எம்.பி யின் மகன் கடைக்குள் புகுந்து தாக்கிய ஆதாரங்கள் அனைத்தும் உள்ள செல்போன்களையும் சி.சி.டி.வி கேமராக்களையும் பறித்து சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல் துறை ஆணையரிடம் பா.ஜ.க வழக்கறிஞர்கள் எஸ்.முத்துக்குமார், ரமேஷ்குமார், கேசவராஜ், அமிர்தராஜ் ஜீவாநாகராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை அழைத்துச் சென்று புகார் கொடுத்தனர்.
- நா.ரவிசந்திரன்