Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மூன்று முத்திரைகளும்! அழகும் ஆரோக்கியமும்!!

இன்றைய மாணவர்களின் கவன சிதறல் அதிக அளவு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை அதற்கான காரண காரியங்கள் ஏராளம் ஏராளம் மாணவர்களின் கவனச் சிதறல்களை மாற்றி நினைவாற்றலை அதிகரிக்க செய்வதில் ஹாக்கினி யோக முத்திரையில் அளப்பரிய ஆற்றல் உள்ளது.

ஒவ்வொரு மனிதர்களும் அறிவுஜீவியாக அல்லது மந்தமாகவோ எல்லாரும் பிறப்பதில்லை. ஆனால் பிறக்கும்போது நல்ல அறிவுத்திறனுடன்தான் பிறக்கிறார்கள். வளரும் சூழ்நிலைகள், உணவுப் பழக்கங்கள் அவர்களின் புத்தியை மழுங்கடித்துவிடுகிறது என்பது 100 சதவீத உண்மை.

நன்கு பயிற்சி பெற்றால் தான் நினைவுத் திறன் வளரும். நினைவுத் திறனை வளர்க்க எந்த மருந்து, மாத்திரைகளும் கிடையாது.

மின் மற்றும் ரசாயனக் குறிப்புகளை கொண்டே, நம் மூளை செயல்படுகிறது. ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டே இருந்தால் தான், அது குறித்த சிந்தனை, “சட்’டென வரும். உணவுகளில் சில குறிப்பிட்ட உணவுகள் உங்கள் மூளையின் திறனை அதிகப்படுத்தும். புத்திக் கூர்மையை பளிச்சிட வைக்கும். மூளைக்கு தேவையான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்து அவற்ரின் ஆற்றலை தூண்டும்.
ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் அதிகரிக்க பல விதமான உணவுப் பழக்க வழக்கங்கள் இருந்தாலும் யோக முத்திரைகளில் ஹாக்கினி முத்திரையை செய்வதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவர முடியும். நினைவுத்திறனை மேம்படுத்தப் பயிற்சி தரும் அமைப்புகள் இந்த முத்திரையை பயன்படுத்துகிறார்கள்.

இந்த முத்திரையைச் செய்துவிட்டு படிக்கத் துவங்கினால், படித்தவை அப்படியே மனதில் தங்கும். எளிதில் புரியும். மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு கேள்விக்கான பதில் மறந்து போனால், உடனே இந்த முத்திரையைச் செய்தால் அது நினைவுக்கு வந்துவிடும்.

இந்த முத்திரையை செய்யும் போது நமது நினைவுகளில் சேமிக்கப்பட்டுள்ள வலது அரைக்கோளத்தின் திறக்க உதவுகிறது. மூளையின் வலது இடது பாகங்கள் ஒன்றிணைக்கிறது.

மூச்சு விடுதலை ஆழமாக்கி நுரையீரலை பலப்படுத்துகிறது ஆழமான மூச்சினால் மூளையும் பயனடைகிறது. கவனத்தை ஒருமுகப்படுத்தலை அதிகரிக்கிறது.

ஹாக்கினி செய்யும்போது வழக்கம் போல் அனைத்து முத்திரைகளை செய்வது போலவே மூச்சுக் காற்றை நன்றாக சீராக இழுத்து வெளியே விட்டு முதுகு தண்டுவடம் நேராக இருக்கும் வகையில் முறையாக அமர்ந்து கொள்ள வேண்டும்.

இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றுடன் ஒன்று பொருந்துமாறு வைத்துக்கொண்டால் அதுதான் ஹாக்கினி முத்திரை.

விரல்நுனிகளில் சக்தி புள்ளிகள் உள்ளன இவை இணையும் போது உடலின் சக்தி அதிகரிக்கிறது.

பெருங்குடலையும் இது பலப்படுத்துகிறது ஆனால் அந்த பலனை பெறுவதற்கு இம்முறையில் சிறிய மாற்றம் செய்து கொள்ள வேண்டும் அதாவது இரு கைகளின் விரல் நுனிகளை பொருத்தும் போது ஒரு விரல் தள்ளி அடுத்த விரல் நுனியைத் தொடுவது போல் வைக்க வேண்டும் அதாவது வலது ஆள்காட்டி விரல் நுனி இடது கட்டை விரல் நுனியிலும், வலது நடுவிரல் நுனி இடது ஆள்காட்டி விரல் நுனியுடனும், வலது மோதிரவிரல் நுனி இடது நடுவிரல் நுனி இடது மோதிரவிரலையும், வலது கட்டை விரல் நுனி இடது கையின் சிறு விரல் நுனியையும் தொடுமாறு வைக்க வேண்டும்.

இது சற்று குழப்பமாக இருந்தாலும் செய்யும் போது சுலபமாக இருக்கும்.

இந்த முத்திரையை செய்யும்போது கண் பார்வை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து மூச்சை இழுத்து விட வேண்டும் மூச்சை உள்ளே இழுக்கும் போது நாக்கின் நுனி ஈறுகளில் பொருந்துமாறு வைக்கவேண்டும் மூச்சை வெளிவிடும் போது நாக்கு தன் நிலைக்கு வர வேண்டும் பின்னர் ஆழமான மூச்சை உள்ளே இழுத்து விடும்போது மறந்தவை நினைவுக்கு வந்துவிடும் என்கிற முத்திரை சாஸ்திரம்.

குறிப்பாக மூளைக்கு வேலை கொடுத்து சிந்திக்கும்போது அல்லது படிக்கும்போதும் எழுதும்போதும் கால்களை ஒன்றின் மீது ஒன்று குறுக்கே வைத்துக்கொள்ளக்கூடாது. மேற்கு திசை நோக்கி உட்கார்ந்து இந்த முத்திரையை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் எந்த நேரம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்….

இதயத்துடிப்பை சீராக்கும் அற்புதமான முத்திரை மாதங்கி முத்திரை..!
மூளையின் ஒரு பாகமான ஹைபோதாலமஸ் என்ற.. அதாவது டோப்போ மாஸ்.. என்ற பகுதியை நன்கு பாதுகாக்கிறது இந்த முத்திரையை ஹைபோதாலாமஸ் என்கின்ற பகுதியில் நம் உடலில் தன்னால் இயங்கும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது தன்னால் இயங்கும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது.
இந்த முத்திரையானது உள்ளுறுப்புகள் சீராக இயங்க உதவுகிறது.
மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் உள்ள இறுக்கம் வலி போன்றவற்றை போகிறது.
இதயம், வயிறு, கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், கணையம், சிறுநீரகம் போன்ற உடலின் அனைத்து முக்கியமான உறுப்புகளும் இந்த முத்திரையைப் பயன்படுகிறது.
இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
குறிப்பாக நாள் ஒன்றுக்கு மூன்று முறை இந்த முத்திரையை செய்து கொள்ள வேண்டும்.

வழக்கம்போல் விரிப்பில் அமர்ந்து கொண்டு இரண்டு கை விரல்களையும் கோர்த்து, உள்ளங்கை பகுதிகள் நன்றாக ஒட்டி இருக்க வேண்டும். இரண்டு கைகளில், நடுவிரலை மட்டும் மேல்நோக்கி நீட்ட வேண்டும். கைகளை தாடைக்கு அடியில் வைத்துக் கொள்ளவும்.

மேலும் மாதங்கி முத்திரையைத் தொடர்ந்து செய்து வர, நினைத்தவுடன் கவிபாடும் திறன், பேச்சுத் திறன், வாக்கு வல்லமை, நுட்பமான கலைகள் கற்கும் திறன், ஞாபக சக்தி, படிக்கும் திறன், இன்னிசைகளை கற்கும் திறன் ஆகியவற்றைப் பெறலாம்.

பிறரை தன்வசமாக்கிக் கொள்ளும் தன்மையும், பயமற்ற பதற்றமற்ற நிலையும், எந்த ஒரு செயலையும் நன்கு ஆராய்ந்து முடிவெடுத்து செய்து முடிக்கும் திறனும் ஏற்படும்.

புத்தியானது நேர்வழியில் சென்று, ஆத்மஞானம் மேம்படும்.

தாடைகளில் ஏற்படும் இறுக்கம், மனஅழுத்தம் குறையும்.

குறிப்பிட்ட வயது தாண்டியும் பூப்பெய்தாத பெண்கள் இதைச் செய்து வர பூப்பெய்துவார்கள்.
எனவே… அழகு ஆரோக்கியம் இயற்கை உங்கள் கையில்.

முத்திரைப் பயிற்சிதான் நமது மூளைக்கு செய்யும் பயிற்சியாகும். இதனால் மூளையில் பாசிடிவ் தன்மை அதிகரிக்கிறது. மூளை உறுதியாக செயல்பட உதவுகிறது. விரல் நுனிகளை மெதுவாகத் தொட்டு விடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது.

ஆத்ம பிரார்த்தனையில் இயற்கை சக்தியும் மனிதனின் மனோ சக்தியும் ஒன்றிணைகின்றன. இது சரீரத்தில் சூட்சமத்திலுள்ள இயல்புணர்வு சக்திகளை  வெளிப்படுத்திச் செயல்பட செய்கிறது. நாள்தோறும்அதிகாலையில் (மொத்தம் 21 நிமிடங்கள்) 5 முத்திரைகளை செய்தால் அற்புதமான சக்தியை உங்களால் உணர முடியும் என்பது சித்தர்களின் அரிய கண்டுபிடிப்பாகும்.

வழக்கம்போல் அமர்ந்து கொண்டு செய்யும் முத்திரைகளில் ஒன்று தான் இந்த உத்திர போதி முத்திரை..!
இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
பேட்டரியை சார்ஜ் செய்வது போல இந்த முத்திரை நமது உடலில் உள்ள சக்தியை ரீசார்ஜ் செய்து கொள்கிறது.
இந்த முத்திரை நுரையீரல் பெருங்குடல் உறுப்புகளுக்கு அதிக சக்தியை கிடைக்க வழிவகை செய்கிறது நுரையீரல் பெருங்குடல் சம்பந்தப்பட்ட நோய்களை உடனடியாக நீக்குகிறது.
இயல்பாக இந்த முத்திரை நமது மூச்சை உள்ளிழுக்கும் சக்தியை அதிகரித்து புத்துணர்ச்சியை கிடைக்கச் செய்கிறது.
மனதிலுள்ள தடுமாற்றங்கள் அனாவசியமான படபடப்பை நீக்குகிறது ஒரு கடினமான காரியத்தைத் தொடங்கும் போது இந்த முத்திரையை செய்தால் நமது வேலை மின்னல் வேகத்தில் ஒரு நிலைப்பட்டு செயல்படுகிறது பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இந்த முறை மிகவும் அவசியமாகிறது.
மனம் சார்ந்த நோய்களை நீக்கும் இந்த முத்திரை மனதை ஒருமைப்படுத்தி கிறது அதனுடன் முக்கியமாக அறிவுத் திறனையும் நினைவாற்றலையும் அதிகரிக்கிறது நரம்பு சம்பந்தமான நோய்களை நீக்குகிறது நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த முத்திரை நரம்பு தளர்ச்சியை போக்குகிறது ஞானக்கண் அல்லது அரக்கன எனப்படும் நமது மூன்றாவது கண்களை திறக்க உதவுகிறது இந்த உத்திர போதி முத்திரை..
இந்த முத்திரை யோனி முத்திரை போன்றது. ஆட்காட்டி விரல் மேல் நோக்கியபடி ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும் கட்டைவிரல்கள் கீழ்நோக்கி ஒன்றுக்கொன்று நுனிகள் சேர வேண்டும் மற்ற மூன்று விரல்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்க வேண்டும்…!
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த முத்திரையை தொப்புளுக்கு ( நாபிக் சக்கரம் ) நேராக வைத்துக் கொள்ள வேண்டும் படுத்துக்கொண்டு நிலையில் இந்த முத்திரையை செய்யும் போது கட்டை விரல்களின் நுனி மார்பெலும்பு முடியும் இடத்தை தொப்புளுக்கு மேலே தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்..
எங்கே தொடங்குங்கள்… என்றென்றும் உங்கள் அழகு ஆரோக்கியம் இயற்கை உங்கள் கையில்தான்…

– சங்கரமூர்த்தி