Save 20% off! Join our newsletter and get 20% off right away!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர், அமைச்சர், சென்னை பெருநகர மேயர் – ஆர்வத்தில் திமுக தொண்டர்கள்

தமிழகத்தில் அசைக்க முடியாத ஆளுமை ,சக்தி ,ராஜதந்திரி என்றால் யாருமே உடனே சொல்லும் பதில் முன்னாள் முதல்வர் கலைஞர் தான். அண்ணாவை அடுத்து தன்னை முழுமையாக நம்பி பேச்சு,எழுத்து, சினிமா என பன்முகத் திறமை கொண்ட ஒரே மனிதர்.இதை யாராலும் மறுக்க முடியாது.  முடியாது..இதற்கு பல்வேறு உதாரணங்களை கூறலாம். ஒருமுறை அண்ணாவிடம் நிருபர்கள் கருணாநிதி, எம்ஜி ஆர் இல்லாவிட்டால் திமுக பிரபலம் ஆகாது என கருத்து நிலவுகிறதே  என்றனர்.அதற்கு அண்ணா, தனக்கே உரிய பாணியில்  குட்டிக்கதை  சொன்னார்.

ஒரு தாய்க்கு கைகால்கள் இல்லாமல், பேச முடியாமல்,,காது  கேட்க முடியாத ஆண் குழந்தை  உண்டு. அவனுக்கு பார்வை மட்டுமே தெரியும். அவன் வளர்த்து வந்தான்   சற்று பெரியவனாகினான். ஒருநாள்  அடுப்பில் பாலை வைத்துவிட்டு இதை பார்த்து க்  கொள்  என்று கூறிவிட்டு தாய் வெளியில் சென்றாள் . சிறிது நேரத்தில் பால் பொங்கி  வழிந்தது. அவனால் எதுவுமே செய்யமுடியவில்லை.. பார்க்கமட்டுமே முடிந்தது.அதே நிலையில்தான் நான் இருக்கிறேன் என அழகாய் அண்ணா கூறினார். இதேபோல மற்றொரு சம்பவம். குளித்தலை திமுக மாநாட்டில் அதிக நிதி வசூல் செய்த கருணாநிதியைப் பாராட்டி அவருக்கு அண்ணா மோதிரம் பரிசளித்தார். அதை பார்த்த கண்ணதாசன், அண்ணா நானும் இந்த மாநாட்டுக்காக உழைத்தேன் எனக்கு ஏன் மோதிரம் அளிக்கவில்லை,?என்றாராம் .உடனே  அண்ணா, தம்பி கருணாநிதி போல நீ இல்லை என்றார். (ஏனென்றால் அவரைப்போல நீயும் ஒரு மோதிரம் வாங்கி என்னிடம் தந்திருக்கலாம் எ ன  அண்ணா கூறியதாக ஒரு கதை கூட உலா வந்தது அந்த லாவுக்கு படு சமர்த்தியசாலி ,  ஐத்ரேய நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற தலைவர்களை ஏன் திமுகவை கட்டி காக்க முடியவில்லை. கருணாநிதி செயல்வீரர். கருணாநிதி பேசினால் கூட்டம்,எம் ஜி ஆரை பார்க்க கூட்டம். இதில் இருவருமே அதை திறமையாக பயன்படுத்தினர். இன்னும் கூட சிலர் கருணாநிதி குடும்ப அரசியல் செய்கிறார். சர்வாதிகாரமகா கட்சி நடத்துகிறார் என கூறுகின்றார்கள். அது உண்மைதான். இதே கட்சியை துரைமுருகன், டி .ஆர் .பாலு, போன்ற மூத்த தலைவர்களிடம் கொடுத்துப்பாருங்கள் .குறைந்த பட்சம் முதல்வர் பதவியை கூட கொடுத்தால் என்ன நடக்கும் ?எடப்பாடி கதிதான். கட்சி அழிந்துவிடும்.கம்யூனிஸ்ட் மாதிரி, காங்கிரஸ் மாதிரி என்ன நடக்கும் என நினைத்துப்பாருங்கள். கருணாநிதி போல எவரும் பிறக்க முடியாது   கட்சியை  வளர்க்க அவர் செய்த  ராஜ தந்திரம் என்ன தெரியுமா  சினிமா.மக்களை கவர் வேறு எந்த ஆயுதத்தையும் அவர் கையில் எடுக்க வில்லை. மக்களிடம் பிரபலம் ஆனவரால்  மட்டுமே கட்சி நடத்த முடியும் என்பதில் அசைக்க முடியாத உறுதி,நம்பிக்கை உண்டு. இத்தகு காரணம் எம்ஜிஆர் .திமுக வளர் அவர் பங்கு  குறிப்பிடத்தக்கது. அதேபோல முக கருணாநிதி மு.க. முத்துவை ;திரையில் இறக்கினார். அது தோல்வியானது அதன்பிறகு அவரின் முயற்சி ஸ்டாலி ன் தந்தை போல பேச்சுதிறமை இல்லை.ஆனால்   நாடகம்,சினிமா, டிவி என மக்கள் மத்தியில் நன்றாக அறிமுகமானார். மெல்ல தண்னை  வளர்த்துக்கொண்டார். அடிப்படை   உறுப்பினராகி,படிப்படியாக முன்னேறி இன்று தமிழகத்தின் முதல்வராகி விட்டார். இன்னும் 10 ஆண்டுகளுக்கு திமுகதான். புலிக்குப்பிறந்தது பூனையாகுமா, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். அதுமாதிரி கலைஞர் இருந்தபோதே

தானை நன்கு வளர்த்து கட்சியில் நல்ல இடத்தை பிடித்து, அணன த்து தலைவர்களையும் அரவணைத்தவர். இன்று அவர் வழியில் இன்று வந்துள்ளவர்  உதயநிதி ஸ்டாலி ன் .திமுகவின் அடுத்த தலைமுறை இவரே. தாத்தா,தந்தையை மிஞ்சிவிடுவார் என்றே பேசப்படுகிறது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மகன்,  திமுகவின் இளைஞரணி செயலாளர்.இதைத் தவிர அவர் ஒரு நல்ல நடிகர் குழந்தைகள் ,பெண்கள் ரசிக்கும்வகையில் கவர்ந்தவர். கடந்த  சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது   தனி நபராக  தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். வேறு நட்சத்திர பேச்சா ளர்கள் யாருமே கள்த்தில் இல்லை, எடப்பாடிக்கே உதயநிதி நானும் பேசுகிறேன் ,,நீங்களும் பேசுங்கள் யாருக்கு கூட்டம் அதிகம் கூடும் என்று பார்க்கலாம் என சவால் விட்டார், அந்த அளவுக்கு தன்னை வளர்த்துக்கொண்டுள்ளார். இதைவிட கட்சியினர் மத்தியில் நெருங்கி பழகும் சுபாவம் கொண்டுள்ளவர்.  கலைஞர் எந்த ஊருக்கு சென்றாலும் கூட்டத்தில் பேசும்போது , அந்த ஊரில் இருக்கும் அடிமட்ட தொண்டன் பெயரை குறிப்பிடுவார். தொண்டன் அழுதேவிடுவான். தாத்தா மாதிரியே இன்று உதயநிதி அனைவரிடமும் நட்பு பாராட்டி வருவது பிளஸ் பாய்ண்ட். குழந்தைகள் கூட உதயா அண்ணா என்று உரிமையுடன் பேசும்அளவுக்கு இன்று திமுகவின் தவிர்க்க முடியாத இளம் தலைவர் ஆகி விட்டார்.  கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு உதயநிதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று அவர் தமிழகம் முழுதும் எல்லா  கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். கலைஞ ர் இருந்தபோது தலைவர்கள்  முதலில் அவருக்கு வணக்கம் வைப்பார்கள். அடுத்து ஸ்தாலினுக்கு வணக்கம் வைத்தார்கள். இன்றும் அதே கதைதான். முதலில் ஸ்டாலினுக்கு வணக்கம் இரண்டாவது உதயநிதிக்கு என நிகழ்ந்து வருகிறது,. இப்படிப்பட்ட நிலையில்தான்

திமுக  அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என   செய்திகள் உள்ள வருகின்றன. இது மூத்த தலைவர்கள் மத்தியில் கிலியையும் இளம் தலைமுறைகள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது,. இதற்கு பிள்ளயார் சுழி போட்டவர்  உதயநிதியின் ரசிகர் மன்ற நிர்வாகி, கலைஞர் ஸ்டாலின் மற்றும் குடுமப நண்பராக திகழும் அன்பில் பேரன், பொய்யாமொழி மகன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ்தான்.  கோவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின்  . உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி எனக்கு வழங்க வேண்டும் என இங்கு பேசியவர்கள் கூறினார்கள். நான் அதை விரும்பவில்லை. தலைவருக்கு துணையாக இருக்கவும், தலைவருக்கும் உங்களுக்கும் பாலமாக இருக்கவும் விரும்புகின்றேன்,” என்றார்.

இவரைத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் நடந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், , ஸ்டாலின் வழியில் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவதாகவும், அவரை அமைச்சராக வேண்டுமெனவும் பேசி பரபரப்பை ஏற்பஎடுத்தி இருக்கிறார். இவரைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலர்கள், நிர்வாகிகளின் குரல் விரைவில் ஒலிக்கும் என்பது உறுதி. இப்படி தன கட்சி மட்டுமே என்பதைத் தாண்டி தோழமை கட்சியான காங்கிரசின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன்.முதல்வருக்கு ஒரு கடிதமே எழுதிவிட்டார். சமீபத்தில் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில், திமுக உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடந்தது. அதில் பேசிய உதயநிதி , அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி எனக்கு வழங்க வேண்டும் என இங்கு பேசியவர்கள் கூறினார்கள். நான் அதை விரும்பவில்லை. தலைவருக்கு துணையாக இருக்கவும், தலைவருக்கும் உங்களுக்கும் பாலமாக இருக்கவும் விரும்புகின்றேன்,” என்றார்.

இப்படி பேசுவது தன்னடக்கம் அதுபோலவே அறிந்த செய்லபாடுகள் அனைவர் மத்தியிலும் பேசப்படுகிறது. குறிப்பாக ,தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலிணை  சென்னையில் சந்தித்தார். அப்போது உதயநிதி மட்டுமே உடன் இருந்தார். அதுவும் ஈட்டாத தொலைவில் பணிவுடன் நின்றே இருந்தது சந்திர சேகர ராவை வெகுவாக கவர்ந்துள்ளது என்கிறார்கள். இப்ப்ட கட்சியில் எந்த பிறரச்னை, கோஷ்டி மோதல் எதுவாக இருந்தாலும் உடனே அவர்களிடன் பேசி தீர்வு, சமரசம் செய்வதில் அண்ணன்  கில்லாடி என அன்புத்தம்பிகள் பெருமிதம் கொள்கின்ற்றனர்,. அன்மையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முல்லைவேந்தன் போன்றோரிடம் இவர் பேசிய விதம் அவர்களை உருக வைத்துவிட்டது. அதிருப்தியில் இருந்த ஒரு மூத்த தலைவர் அழுதே விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் பத்த வச்சிட்டியே பரட்டை  என்பதைப்போல திரியை கொளுத்திவிட்ட மகேஷுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன/ இதை தலைமை ரசிக்கவில்லை என்றாலும் எதிரி எதிர் கட்சிகளின் பல்ஸ் என்பது தெரியவந்துள்ளது. எந்த கொள்கைக்காக கட்சி தொடங்கினாரோ அதை மறந்துவிட்ட வைகோ, இன்று தன து  மகனை கட்சியில் பொறுப்புக்கு கொண்டு வந்துவிட்டார். ஏற்கனவே ராமதாஸ், உள்ளிட்டோரும் இப்படி இருப்பதால் இனி எதிர்ப்பு குரல் என்பது திமுகவுக்கு வராது.

உதயநிதியை பொறுத்தவரை கட்சியில் தனது செல்வாக்கை  நிலைநிறுத்தி விட்டார் என்று கூறலாம் இதன் காரணமாக அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து  தொண்டர்கள் மத்தியில் நல்ல பெயரை  பெற்றுள்ளார்.இதற்கிடையில் இப்போது நடைபெறும் விஷயங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. திமுகவில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின்  வரிசையாக மட்டுமே போஸ்டரில் படங்கள் இடம்பெறுவது வழக்கம். ஆனால்  இப்போது அந்த புரோட்டாக்கால் மாறிவிட்டது. என்றால் கருணாநிதி, ஸ்டாலின் , உதயநிதி என மாறிவிட்டது. இப்போது தமிழக முழுவதும் திமுகவினர் அடிக்கும் போஸ்டரில் இதேமுறை கடைபிடிக்கப்படுவது புதிதான கலாசாரமாக் மாறி விட்டது. இது யார் போட்ட உத்தரவு .எதனால் இப்படி என தொண்டர்கள் தலையை பிய்த்து கொள்கின்றனர். முதல் கட்டமாக சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் விழாவில் உதயநிதி தலைமை வகிப்பார் என நோட்டீஸ் அடிக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எத்தனையோ மூத்த தலைவர்கள்,அமைச்சர்கள்   இருக்கும்போது  இவரை ஏன் முன்னிலைப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன். ஸ்டாலினை பொறுத்தவரை உதயநிதியை  அமைச்சர், துணை முதல்வராக்க விரும்பவில்லை. ஆனால் . மகனை சென்னை   மேயர்   ஆக்கி  அழகு பார்க்க  ஆசைப்படுகிறார் .காரணம் சென்னை தலைநகர் என்பதால் தமிழக முதல்வரைவிட  மேயருக்குக்குத்தான் முதல் மரியாதை கிடைக்கும்.. வெளிநாட்டு முதல் உள்ளூர் தலைவர்களைசந்திக்கும் அற்புத வாய்ப்பு கிடைக்கும். அப்படியே தொடர்ந்து அரசியலுக்குள்  உயர்பதவி வகிக்கும் வாய்ப்பு கிட்டும் என்பது கண்கூடு. இதை கணக்கில் வைத்து தற்போது பதவி வழங்க வேண்டாம் என முதல்வர் முடிவில் உள்ளார். ஆனால்  இளம் சிட்டுக்கள் அதை விரும்பாமல் தங்களின் ஆவல் என்ற பெயரில் அறிக்கை விடுவதை உதயநிதி ரசிக்கிறார்.ஆனால்  முதல்வர்  விரும்பவில்லை என்பதே இப்போதைய உண்மை. எது எப்படி இருந்தாலும் துணை முதல்வர் நிச்சயம் அண்ணனுக்கு கிடைக்கும் என தம்பிகள் விருப்பம் தெரிவிப்பதும் எதிர்பார்ப்பதும் ஆளும் அந்த முதல்வருக்கே வெளிச்சம்

– மூத்த பத்திரிகையாளர் எஸ்.ரவீந்திரன்