ஆன்மீக நகர் திருவண்ணாமலை நகரமன்ற தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அலங்கரிக்கப்போவது யார்? கவுன்சிலர் சீட்டு கேட்டு, பணம் கட்டியிருந்த உடன்பிறப்புகளை பத்து பேர் கொண்ட குழுவினர் புடைசூழ வரச்சொல்லி மாவட்ட திமுக அலுவலகத்தில் நேர்காணல் நடத்தினார் மந்திரியும் மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு. தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த நேர்காணலில், நானூறு பேர் கலந்து கொண்டனர் அண்ணாதுரை எம்பி டாக்டர் கம்பன், மாவட்ட பொருளாளர் பருப்புகடை பன்னீர் மு.பெ.கிரி எம்எல்ஏ, அருகாமையில் இருக்க நேர்காணலை ஆரம்பித்த எ.வ.வேலு.., போலீஸ் ரிப்போர்ட் என் கையில இருக்கு, யாரும் என்னை ஏமாத்த முடியாது இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வாய்ப்பும் தருவேன் என்றவர், வேட்பாளர்களிடம் வார்டுல பொதுமக்கள் மத்தியில அறிமுகமும் செல்வாக்கும் இருக்கா? எவ்வளவு பணம் செலவு பண்ணுவீங்க? பத்து பேர் கொண்ட குழுவின் முழுமையான ஆதரவு இருக்கா? மூன்று நாளைக்குள் பணம் கட்டச்சொன்னா எவ்வளவு பணம் கட்டுவீங்க என்ற கேள்விக்கு ஐந்து லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரை கட்டுவோம் என்று உறுதி கொடுத்தவர்களிடம், கட்டுவீங்க இல்ல என்று மீண்டும் கேட்டார். ஆரம்பம் முதற்கொண்டே மாவட்ட பிரதிநிதி குட்டி புகழேந்தி நகர செயலாளர் பதவிக்கும், நகர மன்ற தலைவர் பதவிக்கும் அடிபோட்டவர், இப்போதைய நிலவரப்படி துணைத் தலைவர் ஆகிவிட்டால் என்ன என்று யோசிக்கிறார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் எடத்தெரு விஜி துணைத் தலைவர் ஒட்டப்பந்தயத்தில் இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் வெளிப்படையா பேசறாங்க, நகர செயலாளர் கார்த்திக்வேல்மாறன் மனைவி நிர்மலாவுடன் வந்திருந்தார் அரசு வழக்கறிஞர் சீனுவாசன் மனைவி பிரியாவுடன் வந்திருந்தார். திமுக மெஜாரிடடியாக ஜெயிப்பது நிஜம் தலைவர் பதவியை அலங்கரிக்கப்போவது நிர்மலாவா.. பிரியாவா? என்கிற பட்டிமன்றம் நேர்காணலின்போதே ஆரம்பித்துவிட்டது. அனைவரையும் பார்வையில் அளந்தார் எ.வ.வேலு. தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் நேர்காணலில் வந்து உட்கார, அவரைப் பார்த்தவுடன் சிரித்தபடியே, யோவ் உனக்குத்தான் இல்லைனு சொல்லிட்டேனே தலைவர் கிட்டேயே சொல்லிட்டேன் புதுமுகத்திற்கு வாய்ப்புனு இப்படி வா பக்கத்தில வந்து உட்காரு எம்எல்சி வரப்போகுது அதில பார்த்துக்கலாம் என்று சொல்லி நேர்காணலுக்கு வந்திருந்தவர்களைப் பார்த்து மீண்டும் ஒரு நோட்டம்விட்டார் ஸ்ரீதரன் தம்பி அருண்குமாருக்கு சீட்டு கேட்டு அண்ணன் ஜீவானந்தம் வந்திருந்தார். கட்சியில யாருக்கு கொடுத்தாலும் ஒ.கே. என் தம்பி அருண்குமாருக்கு கொடுத்தாலும் ஒகே ஜெயிக்க வைக்கிறது என் வேலை என்று உறுதி கொடுத்தார் ஜீவானந்தம் இறுதியாக நேர்காணலை முடித்துக் கொண்டு கிளம்பும்போது பேசிய எ.வ.வேலு, உங்களுக்கு சீட் கொடுத்தாலும் வேற ஒருத்தருக்கு சீட் கொடுத்தாலும் யாரும் சுயேட்சையா போட்டியிடக்கூடாது கட்சி ஜெயிக்கணும் என்று முடித்தார்.
– இரா.இமயவரம்பன்
Leave a Reply