ஒட்டு மொத்த இந்தியாவிலும் மோடிக்கு அதிகமான எதிர்ப்பாளர்கள் தமிழகத்தில் தான் இருக்கிறார்கள். இதனால் தான் இந்த முறை தேர்தலில் மோடியும் அண்ணாமலையும் தமிழகத்தை கட்டம் கட்டினார்கள்
இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் சுமார் 20 சதவீதம் பேர் தான் தமிழகத்தில் இந்துத்துவா கொள்கைகளைக் கொண்டவர்கள் எனவே தான் இங்கு மோடியால் காலூன்ற முடியவில்லை என்பது முக்கிய செய்தி ஆகும்
மோடியை பொறுத்தவரையில் வட மாநிலங்களில் அவருக்கு எப்பொழுதுமே செல்வாக்கு அதிகம் காரணம் வட மாநிலத்தவர்கள் இந்துத்துவா கொள்கையில் அதிகம் ஊரித் திளைத்தவர்கள்.
இந்த நிலையில் தற்போது வட மாநிலங்களிலும் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது
கடந்த 1999 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 182 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது 2014 ஆம் ஆண்டு தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்றது கடந்த இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு தேர்தலில் 303 இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெற்றது எனவே தான் இந்த தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறி வருகிறது
இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவு இந்த முறை இந்தியா கூட்டணி பாரதிய ஜனதா கட்சிக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது
கடந்த தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்றது மட்டுமல்லாமல் 224 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது எனவே தான் பாரதிய ஜனதா கட்சியை இந்தியா கூட்டணியால் வெல்ல முடியாது என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்து வருகிறது
வடமாநிலங்களை பொறுத்தவரையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் கடந்த முறை 62 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது குஜராத் மாநிலத்தில் 26க்கு 26 என வெற்றி பெற்றது
மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகளில் 28 இடங்களில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 24 தொகுதியில் வெற்றி பெற்றது கர்நாடகாவில் 28 தொகுதிகளில் 25 இடங்களை கைப்பற்றியது இதேபோல் ஹரியானாவிலும் பத்துக்கு பத்து என்ற கணக்கில் பாஜக வெற்றி பெற்றது
ஆனால் கடந்த தேர்தல் போல் இந்த தேர்தலில் வடமாநிலங்களில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறாது என சர்வே தகவல்கள் தெரிவித்துள்ளன
இதில் குறிப்பாக கர்நாடகம் மகாராஷ்டிரம் மேற்கு வங்காளம் பீகார் ஹரியானா ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது
இந்த ஏழு மாநிலங்களில் மட்டும் 222 தொகுதிகள் உள்ளன இதில் கடந்த முறை பாஜக 145 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது ஆனால் இந்த முறை அதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள்
கர்நாடகாவை பொருத்தவரையில் பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சி பிரச்சினை உள்ளது இது தவிர ரேவண்ணாவின் பாலியல் அத்துமீறல் பிரச்சனையும் அங்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த முறை சிவசேனாவுடன் வலிமையான கூட்டணி வைத்திருந்தது ஆனால் இந்த முறை அந்த கூட்டணி அமைக்கப்படவில்லை
ஹரியானா மாநிலத்தை பொருத்தவரையில் ராஜபுத்திரர்கள் விவகாரம் பெரிதாக இருந்துள்ளது உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் ராகுல் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது பீகாரில் தேஜஸ்வி யாதவ் பக்கம் மிகப்பெரிய அலை உருவாகி இருக்கிறது எனவே பாரதிய ஜனதா கட்சி மிக வலிமையாக இருந்த மாநிலங்களில் கூட தற்பொழுது பலத்தை இழந்துள்ளது
எனவே வருகிற ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வரை தேர்தல் பரபரப்புகள் நீடித்துக் கொண்டே இருக்கும் என தெரிகிறது
வட மாநிலங்களிலும் மோடிக்கு எதிர்ப்பு அலை… -அதிர்ச்சி தரும் சர்வே!
