தர்மச்செல்வனின் தடாலடி பேச்சு…
அதிருப்தியில் அரசு ஊழியர்கள்…?
தருமபுரி நிஜ நிலவரம்
தருமபுரி மாவட்ட வளர்ச்சிப் பணி கட்சி மாவட்ட வளர்ச்சிப் பணியை கவனிக்க முதல்வர் மு.க.ஸ்டாலினால் நியமிக்கக்பட்டவர் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவருக்கு தெரியாமலே தர்மச்செல்வன் என்பவரை மாவட்ட பொறுளாளராக திமுக தலைமை நியமிக்க, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தோடு நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
பனிரெண்டு வருடங்களாக அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு ஆகியோரின் முழு ஒத்துழைப்பில் மாவட்ட செயலாளராக வலம் வந்த தடங்கம் சுப்பிரமணி, தர்மச்செல்வனின் வருகையால் நீக்கப்பட்டிருக்கிறார் தடங்கம் சுப்பிரமணி திமுகவினரின் புகார்களுக்கு உள்ளானவர் என்றாலும் அமைச்சர்களின் சப்போர்ட்ல தைரியமாக வலம் வந்தார். கடந்த சில வருடங்களாகவே மாவட்ட செயலாளர் பதவியை அடைய எல்லா விதமான முயற்சிகளையும் செய்துவந்த தர்மச்செல்வன், முன்னாள் எம்பி டாக்டர் செந்தில்குமார் ரூட்ல மாவட்ட பொருப்பாளர் பதவியை அடைந்ததாக தருமபுரியில் உடன்பிறப்புகள் மத்தியில் பேச்சாக இருக்கிறது.
முன்னாள் எம்பி டாக்டர் செந்தில்குமார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கேட்க, உங்களுக்கு கிடையாது வேற யாராவது சொல்லுங்க என்று கேட்க, வேற வழியில்லாம தர்மச்செல்வனை கைகாட்டி இருக்கிறார். இதில சின்னதா ஒரு டீலிங் இருப்பதாக திமுகவினர் சிசுசிசுக்கின்றனர்.. வரும் சட்டமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதி எனக்கு பென்னாகரம் உனக்கு என்பதுதான் டாக்டர் செந்தில்குமார் தர்மச்செல்வன் இருவர் அணியின் இரும்புப்பிடி டீலிங்காம். வீடு விட்டா மருத்துவமனை, மருத்துவமனையை விட்டு வெளியே வராமாட்டார். போன் பண்ணா எடுக்கமாட்டார் பி.ஏ.தான் எடுத்துப் பேசுவார்.
கட்சிக்காரனோடு தொடர்பிலேயே இல்லாதவர் இவருக்கு எம்எல்ஏ சீட்டா? விளங்கிடும் தருமபுரி என்று கொதிக்கின்றனர் உடன்பிறப்புகள் ஒன்றிய செயலாளர் பதவியை இழந்த சேட்டுக்கு மீண்டும் ஒன்றியசெயலாளர் பதவி, டி.எல்.காவேரியை பதவியில் இருந்து எடுத்திட முடிவு பண்ணிட்டாங்களாம். ஏரியூர் செல்வராஜ், மடம் முருகேசன் இருவரின் பதவிகளை காலி பண்ண வேலை நடக்குது. தருமபுரி நகர செயலாளர் நாட்டான் மாதுவை எடுத்திட்டு, தங்கராஜை மீண்டும் கொண்டு வர வேலை நடக்குது.
டாக்டர் செந்தில்குமாரின் ஆதரவாளர்களான செல்லதுரை, பெரியாம்பட்டி மகேஷ்குமார் இருவருக்கும் மாநில பதவிக்கு சிபாரிசு பண்ணி இருக்கிறாராம். வைகுந்தம், மல்லமுத்து, இரண்டு ஒன்றிய செயலாளர்கள் தர்மச்செல்வனுக்கு ஆதரவு மனநிலையில் இருக்கின்றனர். இளைஞரணி நிர்வாகிகள் வழக்கம்போல ரொம்ப ஒற்றுமையா இருக்காங்க, மற்றபடி தடங்கம் சுப்பிரமணியால் பதவிக்கு வந்தவர்கள் தனி அணியாக ஒதுங்கியே நிற்கிறார்கள். இழந்த பதவியை மீட்க தடங்கம் சுப்பிரமணி அறிவாலயத்தை சுற்றிக்கொண்டிருக்கிறார் அமைச்சர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அடுத்த மாவட்ட செயலாளர் லிஸ்ட்ல நான் இருந்தேனே எப்படி மிஸ் ஆச்சினு தெரியலையே? என்று சிட்டிங் எம்பி ஆ.மணி குமுறிக்கொண்டு இருக்கிறார். தருமபுரி மாவட்டத்தின் ஒரே மக்கள் பிரதிநிதி ஆ.மணிதான்! திமுக நிர்வாகிகள் மத்தியில் தொடர்ந்து பேசப்படுபவராகவே இருக்கிறார் இதுவரை இருந்த எம்பிகளில் ஆ.மணி பெட்டர் என்கின்றனர் இருவரும் எ.வ.வேலு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பின்னணியில் வலம் வருபவர் மாவட்ட செயலாளர் பதவியை அடைய ஆ.மணி கடுமையான முயற்சியில் இருக்கிறார்.
பெரியண்ணனோடு திமுகவுக்கு வந்த தர்மச்செல்வன் எப்படியாவது பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஆகிவிட வேண்டும் என்பதுதான் பெரிய கனவாக வைத்திருக்கிறார். அதற்கு பெரியண்ணன் மகன் இன்பசேகரன் தடையாக இருப்பார் என்பதனால், உள்ளடி வேலைகள் செய்து கடந்த சட்டமன்ற தேர்தலில் தர்மச்செல்வன், இன்பசேகரனை தோற்கடிக்க அதற்கான ஆதரமாக வைவ் ஆடியோவை தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆடியோவை கேட்ட அனைவருக்குமே அதிர்ச்சிதான்! இவரா மாவட்ட பொறுப்பாளர் என்று திமுகவினர் அதிர்ச்சியாகி கிடக்கின்றனர். பென்னாகரம் பெரியண்ணனின் தனிப்பட்ட செல்வாக்கு உள்ள தொகுதி! அங்கு இன்பசேகரன் தயவில்லாமல் தர்மச்செல்வனால் ஒன்றும் செய்ய முடியாது தொகுதி நிலவரம் அப்படி!
மாவட்டப் பொறுப்பாளராகி தருமபுரி வந்தவுடன் திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, மாவட்ட பொறுப்பு மந்திரி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் எஸ்பி, உள்ளிட்ட அதிகாரிகளை ஒறுமையில் விளாசிதள்ளிவிட்டார். கட்சி நிர்வாகிகளுக்கும் மிரட்டல் போட்டார் தர்மச்செல்வனின் நீ, வா, போ, மரியாதையான பேச்சை யாரும் ரசிக்கவில்லை பேச்சில் மிகுந்திருக்கும் பண்ணையார் தனத்தை திமுகவினர் யாரும் விரும்பவில்லை என்பது கண்கூடான உண்மை. அண்ணன் எட்டாம் வகுப்பு படித்திருப்பதாக சொல்லுகின்றனர். தர்மச்செல்வன் பேச்சால் அதிருப்தி அடைந்த அரசு ஊழியர் சங்கம் போராட்டத்திற்கு தமிழக அளவில் தயாராக, திமுக தலைமை கூப்பிட்டு அரசு ஊழியர்களின் கோபத்தை தணிக்க, தர்மச்செல்வனும் வருத்தம் தெரிவித்து விட்டாராம். ஆனாலும் அரசு ஊழியர்கள் மத்தியில் அனலடிக்குது தருமபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் திமுக ஆதரவில் ஓட்டை விழுந்துவிட்டது நிஜம்!
இவ்வளவு பிரச்சனைகளோட எப்படி தர்மச்செல்வன் கட்சி பண்ண முடியும்? அசராமல் தடங்கம் சுப்பிரமணி, ஆ.மணி,எம்.பி.இன்பசேகரன் மூவரும் மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க சென்னையில் முகாமிட்டு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தர்மச்செல்வன் திமுகவின் சார்பில் அணி நிர்வாகிகளை கூப்பிட்டு பேசிக்கொண்டிருக்கிறார். திமுகவினர் மத்தியில் உற்சாகமில்லை உளவுத்துறை, பெண் அமைப்பு அறிவாலயத்திற்கு ரிப்போர்ட் அனுப்பி இருக்காங்களாம்… தர்மச்செல்வன் மாற்றப்படலாம் என்பதுதான் உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எதுவும் நடக்கலாம்… அது உடனேவும் நடக்கலாம்! சில மாதங்களுக்கு பிறகும் நடக்கலாம்.
– ஆலவாயர்
—
Iniyavan, M.A.,