Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ஜூன் முதல் வாரம், செப்டம்பர் முதல் வாரம், திமுகவில் இதுதான் நடக்கப்போகிறது

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் திமுக சார்பில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளில் களம் இறங்க தொடங்கிவிட்டனர்
வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மிக தீவிரமாக இருக்கிறார்
இதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடத்தப்படுகின்றன
முதல் கட்டமாக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறது கூடவே தொழில் துறை அமைச்சர் பதவியும் தரப்படுகிறது
தற்போது தொழில்துறை அமைச்சராக இருக்கும் ராஜா இடமாற்றம் செய்யப்படுகிறார் இதே போல் அமைச்சர்கள் பி டி ஆர் பழனிவேல் ராஜன் சேகர் பாபு ஆகியோரும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்
கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோரும் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள் மொத்தம் ஆறு அமைச்சர்கள் பதவி மாற்றம் செய்யப்படுகிறது
தலைமைச் செயலாளரும் மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட இருக்கிறார் என்பதும் முக்கிய செய்தியாகும்
கடந்த தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக ஏராளமான ஆலோசனைகளை வழங்கிய பிரசாந்த் கிஷோர் மீண்டும் திமுகவுடன் ஒப்பந்தமாகி இருக்கிறார்
சபரீசன் மூலம் பேரம் பேசப்பட்டு அவருக்கு பல கோடி ரூபாய் தரப்பட்ட நிலையில் பிரசாந்த் கிஷோர் மீண்டும் திமுகவுக்கு தேர்தல் பணி செய்கிறார்
வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரசாந்த் கிஷோரின் பணிகள் தொடங்குகின்றன
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது போன்ற திட்டங்களை வகுத்துக் கொடுத்தது பிரசாந்த் கிஷோர் தான் அதேபோல் வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் புதுமையான அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன
செப்டம்பர் மாதத்தில் ஏராளமான மாவட்டச் செயலாளர்கள் பதவி பறிபோகிறது .மொத்தம் 10 மாவட்ட செயலாளர்கள் பதவி காலியாகிறதுதற்போது இருப்பதைவிட கூடுதலாக மாவட்ட செயலாளர்கள் பதவி உருவாக்கப்படுகிறது
உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு 80 சதவீதம் முக்கியத்துவம் தரப்பட்டு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்
ஜூன் முதல் வாரத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் பட்சத்தில் அதற்கான பதவி ஏற்பு விழா பதவி பிரமாணம் என்றெல்லாம் பெரிதாக எதுவும் ஏற்பாடுகள் செய்யவில்லை மிக எளிமையான முறையில் லெட்டர் பேடு அறிவிப்போடு அவரது பதவி ஏற்பு நடைபெறுகிறது
வருகிற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் முக்கிய எதிரியாக பார்க்கப்படுகிறது
எனவே தான் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் முக்கிய கட்சி பொறுப்புகளை வழங்கி தமிழகத்தில் ஏராளமான இளைஞர்களுக்கும் புதிய பதவிகள் தரப்பட தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது
வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்திலேயே சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார கூட்டங்களையும் நடத்த வேண்டும் என்பதற்கான திட்டங்களையும் திமுக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது