சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி சோழவந்தான் உள்பட இதனை சுற்றி சுமார் 30 கிராமங்களுக்கு சுமார் 50 ஆயிரம் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது. தினசரி அதிகமான வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த இந்த அரசு ஆஸ்பத்திரி நாளடைவில் ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர் மற்றும் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாததால், தினசரி ஆயிரம் பேர் இந்த அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சொல்லும் நிலையில் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல், இந்த ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒரு சில பணி யாளர்களால் இங்கு வரக்கூடிய நோயாளிகள் வேறு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல சொல்லி கூறுவதால், நோயாளிகள் பெரிதும் அவதிப்
படுகின்றனர். தங்களுக்கு ஏற்பட்ட நோய்களை மருத்துவர்களிடம் காண்பித்து, சிகிச்சை பெற்று நோயிலிருந்து குணமடைவோம் என்று, சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு வரக்கூடிய நோயாளிகள் பெருத்த மன வேதனையில் இங்கிருந்து திரும்பி வாடிப்பட்டி, மேலக்கால், மன்னாடி மங்கலம், மதுரை போன்ற அரசு ஆஸ்பத்திரிக்குச் செல்லக்கூடிய அவல நிலை உள்ளது.
இங்கு போதுமான டாக்டர்கள், பணியாளர்கள் இல்லாமல், இங்கு வரக்கூடிய நோயாளி களுக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல், மாற்று ஆஸ்பத்திரிக்கு அனுப்பக்கூடிய அவல நிலை இங்கு உள்ளது. இங்கு பணியாற்றக்
கூடிய பணியாளர் சிலர் வரக்கூடிய நோயாளிகளை எரிந்து விழுவதும், தனக்கென்று அதிகாரத்தில் வாய்க்கு வந்தபடி திட்டுவதால் , மனநோந்து நோயாளிகள் சிகிச்சை பெறாமலே வெளியே செல்கின்றனர்.
இது மட்டும் அல்லாது சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் சில சான்றிதழுக்கு கையெழுத்து வாங்க சென்றால் மருத்துவ அதிகாரி இல்லை என்றும் நாளைக்கு திருமணத்தை வைத்துக் கொண்டு இன்று வந்து கையெழுத்து கேட்கிறீர்கள்?
இன்று மேடம் விடுமுறை ஆகையால் வேறு எங்காவது வாங்கிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி வைக்கிறார்கள். இது மட்டும் அல்லாது எந்த ஒரு சான்றுக்கும் கையெழுத்து மருத்துவ அதிகாரியிடம் வாங்க முடியாமல், பல பேர் திணறுகின்றனர். கோவிலில் நந்தி இருப்பது போல் ஆஸ்பத்திரியில் முன்னாள் உட்கார்ந்து கொண்டு எந்த வேலையும் பார்க்காமல் வரக்கூடியவர்களை எரிந்து விழுந்து திசை திருப்புவதே வேலையாகக் கொண்டி
ருக்க கூடிய பணியாளரால் வரக்கூடிய நோயாளிகள் தங்கள் நோயை தீர்க்கலாம் என்று நினைத்து வரும்பொழுது இதுபோன்ற செயல்களால் மன வேதனை அடைந்து மேற்கொண்டு துன்பத்தை அடைந்து வேறொரு ஆஸ்பத்திரிக்கு செல்கின்றனர். இதுபோன்ற அரசு பணத்தை விரையமாக்கும் பணியாளரை மாற்று இடத்துக்கு அனுப்ப வேண்டும் என்று நோயாளிகள் மனவேதனை அடைவதாக கூறுகின்றனர். இது குறித்து, மாவட்ட
மருத்துவ அதிகாரி சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் முழுமையாக ஆய்வு செய்து வேலை செய்யாமல், இருக்கக்கூடிய பணியாளரை மாற்றி அவருக்கு பதிலாக வேறொரு பணியாளரை நியமிக்க வேண்டும் ,
இங்கு காலியிடமாக உள்ள பணி யிடங்களுக்கு விரைவில் ஆட்களை அமர்த்த வேண்டும். எக்ஸ்ரே, தினசரி எடுக்க வேண்டும், சாதாரண காயங்கள் மதுரைக்கு 108 மூலம் அனுப்புகிறார்கள் ஒருவேளை இங்கு போதுமான டாக்டர்கள் இல்லையா?இல்லை சாதாரண காயங்கள் கூட மருந்து கட்டுவதற்கு மருந்து கட்டுபவர் இல்லையா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். சோழவந்தான் தொகுதி என்று இருந்து தொகுதியின் தலைமை இடமாக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக ளுக்கு போதுமான வசதிகள் சிகிச்சை அளிப்பதற்கான டாக்டர்கள், எக்ஸ்ரே உட்பட மற்ற மருத்துவப் பணிகளுக்கும் நிரந்தரமான பணியாளர்கள் ஏற்படுத்த வேண்டும்.
துப்புரவு பணியாளர், பிணம் அறுவை உதவியாளர், மருந்து கட்டுவோர், போதுமான டாக்டர்கள், போதுமான செவிலியர்கள், எக்ஸ்ரே தினசரி செயல்படுத்த அதற்கான பணியாளர்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று, சோழவந்தான் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு சீட்டு வாங்கும் இடத்தில் நீண்ட வரிசை இருப்பதால், சிலர் நிற்க முடியாமல் உட்கார்வதற்கு இடம் இல்லாமல் மயங்கி கீழே விழுகின்றனர். இதனால் சீட்டு வாங்கும் இடத்தில் வயதான மிகவும் நோய் வாய்ப்பட்டவர்கள் உட்காருவதற்கு சீட் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்
கைகளை நிறைவேற்ற வேண்டுமென, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு, கோரிக்கை வைத்துள்ளனர்.
– நா.ரவிச்சந்திரன்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply