Save 20% off! Join our newsletter and get 20% off right away!

நாடாளுமன்ற தேர்தல்…திமுக வெற்றியும், பாஜக தோல்வியும்காரணம் என்ன?

கடந்த மக்களவைத் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் திமுக மற்றும் பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டது யார் வருவார் யார் வருவார் என்ற கேள்வி மக்களிடையே பரபரப்பாக காணப்பட்டது……

திமுக சார்பில் போட்டியிட்ட ஆ, ராசா, ஏற்கனவே நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் பாஜக சார்பில் எல், முருகன், நிறுத்தப்பட்டார் அதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் அவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டார் நாம் தமிழர் கட்சியில் நீலகிரி மாவட்டம் முத்திரை பாலடா பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்ற விவசாயி போட்டியிட்டார்…..

இதில் அதிமுக சார்பில் ஏற்கனவே குன்னூர் நகர செயலாளராக இருந்த சரவணனுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது ஆனால் கட்சி நிர்வாகம் செலவுகள் மொத்தமும் வேட்பாளர் செலவு செய்ய வேண்டும் என்று கூறியதால் சரவணன் அதிலிருந்து பின்வாங்கி விட்டார் அதற்கு பின்பு முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களின் மகன் லோகேஷ் தமிழ் செல்வன் நீலகிரி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்…..

லோகேஷ் தமிழ் தமிழ்ச்செல்வன் மாவட்டத்தில் அறிமுகம் இல்லாத நபர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தேர்தலுக்காக எந்த ஒரு செலவுகளும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ, ராசா, மற்றும் பாஜக சார்பில் போட்டியிட்ட எல், முருகன், ஆகிய இருவர் மட்டுமே நீலகிரி மாவட்டத்தில் பட்டிதொட்டி எல்லாம் சென்று வாக்கு சேகரிக்க ஆரம்பித்தனர் ஆனால் ஒரு கட்டத்தில் படுகர் சமுதாயத்தின் வாக்குகள் அனைத்தும் பாஜகவிற்கு தான் விழும் என்றும் கூறப்பட்டது பொதுமக்கள் இடையே வெற்றி பெறப்போவது திமுகவின் ராசாவா? அல்லது பாஜகவின் எல் முருகனா? என்று குழப்பத்தில் மலை மாவட்ட வாக்காளர்கள் இருந்தனர்……

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த நான்காம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக வேட்பாளர் ஆ, ராசா, முன்னணியில் பயணத்தை தொடங்கினார் மதிய வேலை ஆகும்பொழுது பத்து ரவுண்டுகள் சென்று கொண்டிருந்தது அப்பொழுது ஆ, ராசா, தான் முன்னணியில் இருந்தார் அப்பொழுதே வாக்கு என்னும் மையத்தின் வெளியில் எதிர்க்கட்சியினர் சோர்வடைந்தனர் மொத்தம் 23 சுற்றுகள் உள்ள நிலையிலும் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி கூடலூர் உதகை குன்னூர் மேட்டுப்பாளையம் அவினாசி பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்றங்கள் அடங்கிய தொகுதி என்பதாலும் பாஜகவினர் எப்படியாவது வென்று விடுவோம் என்று எண்ணி இருந்தனர் ஆனால் 10 ரவுண்டுகள் செல்லும் பொழுது ராசா முன்னணியில் வந்த பிறகு பாஜகவினருக்கு தோல்வி பயம் துவங்கியது அதிமுகவினரோ மதிய வேளையிலேயே வாக்கு என்னும் மையத்தை விட்டு பலரும் கிளம்பி விட்டனர்…..

இறுதியில் 23வது சுற்று முடிவில் தபால் வாக்குகள் என்னும்பொழுது திமுக வேட்பாளர் ஆ ராசா, பாஜக எல்,முருகன், மற்றும் அதிமுக லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரை விட இரண்டு லட்சத்து 40 ஆயிரத்து 585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் ஆ ராசாவிற்கு கிடைத்த மொத்த வாக்குகள் 4,73, 212, என்றும் பாஜக வேட்பாளர் எல், முருகன், 2,32,627 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்2,20,230 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் 58,821 வாக்குகள் பெற்று நான்காம் இடத்திலும் காணப்பட்டார்.

பாஜக மற்றும் அதிமுக தோல்விக்கு காரணம் பாஜகவில் மூத்த அதாவது கைதேர்ந்த தலைவர்கள் யாரும் நீலகிரியில் இல்லை என்பதும் சரியான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவில்லை என்பதும் பொது மக்களால் பேசப்படுகிறது அதேபோல் அதிமுகவில் அறிமுகம் இல்லாத நபரை நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தியதும் அதேபோல் அதிமுக உடைய முக்கிய நபர்கள் தேர்தலுக்காக சுறுசுறுப்பாக பணிகள் செய்யாமல் முடங்கி கிடந்ததும் அதிமுக மூன்றாவது இடத்தை பிடிக்க காரணமாகிவிட்டது என்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது அதேபோல் பாஜகவிற்கு இந்து முன்னணியின் வாக்குகள் மட்டுமே கை கொடுத்துள்ளது மற்றும் அதிமுகவில் வெறுப்புணர்ச்சியில் இருந்த அதிமுகவின் வாக்குகளும் பாஜகவிற்கு விழுந்துள்ளது ஆர் எஸ் எஸ் இன் வாக்குகள் பெரிதாக ஒன்றும் பாஜகவிற்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது அதேபோல் சிறுபான்மையினரின் வாக்குகள் முழுக்க முழுக்க திமுக ஆ ராசாவிற்கு மட்டுமே விழுந்துள்ளது மேட்டுப்பாளையம் தொகுதியில் மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் சிறுபான்மையினர் அதிகம் என்பதால் பாஜக எல் முருகனுக்கு இரு பகுதிகளிலும் பெரிதாக வாக்குகள் கிடைக்கவில்லை என்பதும் கூறப்படுகிறது எது எப்படியோ மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக ஆ ராசா தேர்ந்தெடுக்கப்பட்டது திமுகவினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.