நீரின்றி இவ்வுலகம் அமையாது என்கிறது திருக்குறள். உயிர் வாழ்வதற்கு மிக முக்கியம். விவசாயத்திற்கும் நீர் அவசியம். இவ்வுலகம் இயங்குவதற்கு தண்ணீர் இன்றியமையாதது. நீரைக் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்.
வெறும் வயிற்றில் நீர் பருகினால் குடல் சுத்தமாகும். பசியைத் தூண்டும், இரத்த செல்கள் உற்பத்தியாகும். தலைவியைத் தடுக்கும், அல்சரைத் தடுக்கும், பொலினா சருமத்தைக் கொடுக்கும். மேலும், உடல் கழிவுகளை வெளியேற்றும். ஒருவர் ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் பருகவேண்டும்.
ஆரோக்கிய இன்மைகள் : தண்ணீரின் பற்றாக்குறை நீரழிவுக்கு வழிவகுக்கும். இது உடல் வெப்பநிலை மற்றும் செறிவு மற்றும் சோர்வு இன்மைக்கு வழிவகுக்கும்.
தண்ணீரின் முக்கியத்துவம் : நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். ஆரோக்கியமான உடல், மகிழ்ச்சியான வாழ்க்கை தண்ணீர் என்பது இயற்கை நமக்கு வழங்கிய கொடை. தினமும் தவறாமல் தண்ணீர் குடிப்பதே நமது உடலுக்கு சிறந்த வழியாகும்.
தண்ணீர் குடிக்காததால் ஏற்படும் விளைவுகள் : தண்ணீர் குடிக்காவிட்டால் தாகம் எற்படும் மேலும் சிறுநீர் கழிப்பது குறையும். மேலும் சோர்வு, மலச்சிக்கல் ஏற்படும். தண்ணீர் குடிப்பது ஒவ்வொரு வாகனத்திற்கும் தேவையான எரிபொருள் போன்றது.
தண்ணீரின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1993 மார்ச் 22ம் தேதி முதல் “உலக தண்ணீர் தினம்” கடைபிடிக்கப்படுகிறது.
பயன்கள் : வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் மூலம் நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற தண்ணீர் உதவுகிறது. மேலும், தண்ணீர் குடிப்பது கலோரிகளை குறைக்கவும், உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது. விவசாயத் துறையில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. தண்ணீரின் உதவியுடன் நீர்ப்பாசனம் சாத்தியமாகும்.
துணி துவைப்பது, குளிப்பது, சமைப்பது போன்ற பல்வேறு வீட்டு உபயோகங்ளுக்கு தண்ணீர் பயனுள்ளதாக உள்ளது. சுற்றுச்சூழல் அமைப்பை சமநிலைப்படுத்த தண்ணீர் உதவுகிறது.
எஃகு தொழில், உரங்கள், இரசாயனங்கள், சிமெண்ட், காகிதம் போன்ற பல தொழில்களில் இது பயன் உள்ளதாக இருக்கிறது.
மனிதன் தண்ணீர் இல்லாமல் வாழமுடியாது. மின் உற்பத்திக்கும் பயன்படுகிறது.
மீன், வன விலங்குகள், கால்நடைகள், புல் பூண்டு போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் தண்ணீர் அவசியமாகிறது.
தண்ணீர் சேமிப்பு : மனித குலத்திற்குத் தேவைப்படும் நீரை ஏரி, குளம், குட்டை, கண்மாய், அணைகள், மழைநீர்த் தொட்டி ஆகியவை மூலம் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது.
இரா.கலாவதி
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply