Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சோழவந்தான்-ஆக்கிரமிப்பிலிருந்த வீடுகள்…இடித்து தரை மட்டம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப் பள்ளம் கிராமத்தில் ஐயப்பன் கோவில் முதல் விநாயகபுரம் காலனி வரை சாலையின் இருபுறமும் சுமார் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்பில் வீடு கட்டி உள்ளதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தனிநபர் ஒருவர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்திருந்த நிலையில்  ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்பேரில்  காலை சமயநல்லூர் காவல்துணை கண்காணிப்பாளர்ஆனந்தராஜ் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி ஆகியோர் தலைமையில் சுமார் 300 போலீசார் தீயணைப்படையினர் மற்றும் வாடிப்பட்டி தாசில்தார் ராமச்சந்திரன் உட்பட வருவாய்த்துறையினர் நெடுஞ்சாலைத் துறையினர் பொதுப்பணித்துறையினர் மின்சாரத் துறையினர் போக்குவரத்து துறையினர் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் 4ஜேசிபி மிஷின்,6 டிராக்டர் ஆகியவை மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர் இதனால் சுமார் 50 ஆண்டுகள் குடியிருந்து வந்த மக்கள் தங்களது வீடுகளை இழந்து வீதியில் தவித்தது காண்போரை கண்கலங்க செய்தது  மேலும்இந்த ஆக்கிரமிப்பை எடுப்பதற்கு முன்பாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர் குறிப்பாகதென்கரை முள்ளிப்பள்ளம் காடுபட்டி விக்கிரமங்கலம் மன்னாடிமங்கலம் குருவித்துறை சித்தாதிபுரம் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லக்கூடிய மாணவ மாணவிகள் பணிக்கு செல்லக்கூடிய ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் விவசாய தொழிலாளர்கள் ஆகியோர் போக்குவரத்து வசதிகள் செய்யாததால் மிகவும் சிரமப்பட்டனர் அதாவது திடீரென்று போக்குவரத்தைமாற்று வழியில் ஏற்பாடு செய்ததால் தென்கரை வரை வந்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர் அதிலும்ஆக்கிரமிப்பு எடுக்கும் பொழுது ஏற்படக்கூடிய ஆபத்தை அறியாமல் ஒரு சிலர் நடந்தே சென்றனர்
 ஆக்கிரமிப்பை எடுப்பது என அரசு அதிகாரிகள் முன்பே முடிவு செய்து இருந்ததால்  ஆக்கிரமிப்பு எடுக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து அந்த பள்ளிகளுக்கு மட்டுமாவது விடுமுறை அறிவித்திருக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்  இதே போல் அந்தப் பகுதியில் இருந்து முள்ளிப் பள்ளம் கிராமத்தை கடந்து மற்ற ஊர்களுக்கு அதாவது மன்னாடிமங்கலம் குருவித்துறை காடுபட்டி விக்கிரமங்கலம் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர் இதுகுறித்து பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு போடு ஒன்றை அரசு வைத்திருந்தால் பொதுமக்களின் பல்வேறு சிரமங்களை தவிர்த்து இருக்கலாம் என கூறினர் இனிவரும் காலங்களிலாவது இது போன்ற சம்பவத்தின் போது அரசு முன்னெச்சரிக்கையுடன்  செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டனர்

– நா.ரவிச்சந்திரன்