மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில், கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்
கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்
கைக்கு எதிப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் மற்றும் கள்ளர் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்
மாவட்டங்களில், உள்ள 200-க்கும் மேற்பட்ட
கள்ளர் சீரமைப்
புத்துறை, மற்றும் ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளை, பள்ளிக்
கல்வித்
துறையுடன் இணைக்க ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழுவினரால் ஆய்வறிக்கை தமிழ்நாடு அரசிடம் வழங்கப்
பட்டுள்ள சூழலில், பழமை வாய்ந்த இப் பள்ளிகளை பள்ளிக்
கல்வித்
துறையுடன் இணைக்கும் நடவடிக்
கைக்
கு எதிர்ப்பு தெரிவித்து, தென்
மாவட்டங்களில் உள்ள பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்
களில்,
ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு கள்ளர் சீரமைப்
புத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளை பள்ளிக்
கல்வித்
துறையுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் மற்றும் கள்ளர் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என, சுமார் 200க்கும் மேற்பட்டோர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, உசிலம்பட்டி தேவர் சிலை
யிலிருந்து ஊர்வலமாக வந்து முருகன் கோவில் முன்பு தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், கள்ளர் சீரமைப்புத்
துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை மாற்ற கூடாது என கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply