மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பகல் நேரங்களில் கடுமையான வெப்பநிலை நிலவினாலும், மாலை நேரங்களில் அதை தணிக்கும் வகையில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மதுரை, சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், அழகர் கோவில், மேலூர், கருப்பாயூரணி, திருமங்கலம், கள்ளிக்குடி, சமயநல்லூர், தேனூர், கொடை ரோடு, அம்மையநாயக்கனூர்,
பள்ளப்பட்டி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, உள்ளிட்ட பல ஊர்களில் மாலை நேரங்களில் குனிந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மதுரை நகரில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், கோமதிபுரம், ஜூப்ளி டவுன் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மழை நீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது. மதுரை அண்ணா நகர், தாசிலா நகர் மருது பாண்டியர் தெரு, சித்தி விநாயகர் கோவில் தெரு, வீரவாஞ்
தெருதெரு, சௌபாக்கியார் கோவில் தெரு தெருக்களில் மழை நீர் செல்ல வழி இல்லாமல், சாலைகளிலே குளம் போல தேங்கி, கொசு உற்பத்தி பெருகி வருகிறது.
இது குறித்து, இப்பகுதி மக்கள் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற ஆர்வம் காட்ட
வில்லை என, கூறப்படுகிறது. இது குறித்து, மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர், உதவி ஆணையாளர்,மாநகராட்சி உறுப்பினர்கள் ஆகியோர்கள் பார்வையிட்டு சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டு
மென,
இது பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை தாசில்தார் சித்தி விநாயகர் தெருவில் தேங்கியுள்ள மழை நீரில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள்,தடுமாறி விழுந்து காயம் ஏற்படுகிறதாம்.
மதுரை மாநகராட்சி உதவிப் பொறியாளர்,உடனடியாக சித்தி விநாயகர் கோயில் தெருவில் கடந்த பல நாள்களாக குளம் போல தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க மதுரை மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி முத்துராமன் கோரிக்கை விடுத்துள்ளார்
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply