மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அமைந்துள்ளது தென்னகத்து வேளாங்கன்னி என்றழைக்கப்படும் புகழ்வாய்ந்த ஆரோக்கிய அன்னை திருத்தலம். இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஆரோக்கிய அன்னையின் பிறப்புப் பெருவிழா, இறைவார்த்தை சபை எஸ்.வி.டியின் 149வது பிறப்பு விழா மற்றும் அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 24வதுஆண்டு பிறப்பு விழா ஆகியவையை கொண்டாடும் வகையில் ஆண்டுப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தையொட்டி சிறப்பு திருப்பலி நடத்தி, கொடி மரத்திற்கு பூசை செய்து மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோனிபாப்புசாமி திருவிழா கொடியேற்றி வைத்தார். அப்போது தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் மரியே வாழ்க என முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து 30ந்தேதி வெள்ளிக் கிழமை முதல் செப்டம்பர் 7ந்தேதிவரை நாள்தோறும் மாலை 6மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெற உள்ளது.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அன்னை தேர்பவனி வருகிற செப்டம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறுகிறது
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply