மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, வாலாந்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலை புரணமைப்பு செய்து கும்பாபிஷேக விழா கடந்த 10.06.2022 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகம் மற்றும் கோவில் கட்டுமான பணிக்காக பக்தர்கள், பங்காளிகள் என சுமார் 15 கோடி ரூபாய் வசூல் செய்யப்
பட்டதாகவும்., அதில் சுமார் 3 கோடி ரூபாய்-யை வசூல் செய்யும் பணியில் இருந்த சங்குமாயன், அம்மாவாசி, பெரியராமன், பாண்டி மற்றும் பி.சி.ராமன் என 5 பேர் கையாடல் செய்துள்ளதாக அதே ஊரைச் சேர்ந்த கோடிவீரணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த 5 பேர் மீதும் தற்போது, 3 பிரிவுகளின் கீழ் வாலாந்தூர் காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் கும்பாபிஷேக விழாவிற்காகவும், கட்டுமான பணிக்காக சேகரிக்கப்பட்ட பணத்தை கையாடல் செய்திருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் மற்றும் கோவிலுக்கு பாத்தியப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply