Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மதுரை-திமுக நடத்திய இரட்டை மாட்டு வண்டி போட்டி

டாக்டர் கலைஞர், நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக சார்பாக மாபெரும் இரட்டை மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை  பந்தயம் ஊமச்சிகுளம் பகுதிகள் நடைபெற்றது . போட்டியினை
 மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.பி. மூர்த்தி  கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த மாடுகளும்  குதிரைகளும் போட்டிகளில் பங்கு பெற்றன.
பெரிய மாடு, சின்ன மாடு என மூன்று  பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெற்றன. ஊமச்சிகுளத்தில் இருந்து வெளிச்சநத்தம் விளக்கு வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு போட்டிகள் நடைபெற்றன.
சின்ன மாடு இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.
 அதில், முதல் பரிசை மயிலாங்குடி மலைச்சாமி
கோனார் காளைகளும்,
டி. புதுப்பட்டி .சின்னச்சாமி அம்பலம் காளைகளும்
 முதல் பரிசையும்,
 இரண்டாம் பரிசை சீவல்லபேரி டாக்டர். சுப்பையா பாண்டியன் காளையும், மதுரை சத்திரப்பட்டியை  சேர்ந்த முத்துகிருஷ்ணர் என்பவர் காளைகளும் இரண்டாம் பரிசை பெற்றன, சண்முகபுரம் விஜயகுமார் மெடிக்கல் காளைகளும், வேலங்குளம் கண்ணன் காளைகளும்
 மூன்றாம் பரிசையும் பெற்றன.
குதிரை வண்டி பந்தயத்தில் மதுரை மாவட்டம் ஆமூர் பிரபு குதிரை முதல் பரிசையும், இரண்டாம் பரிசாக திருச்செந்தூர் வினோத்தின் குதிரையும், மூன்றாம் பரிசை சென்னை கிங்ஸ்டார் குதிரையும்  வென்றது.
இதில்,
 பெரிய மாட்டு வண்டிக்கு  முதல் பரிசாக 2 லட்சம் ரூபாயும்,  இரண்டாம் பரிசாக 1.50 லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 1 லட்சம் ரூபாயும், குத்து விளக்குகளும் வழங்கப்பட்டது.
இதேபோல்,
 சின்ன மாடு வகையில் முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் வழங்கப்பட்டது,
குதிரை வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக 40 ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும்,
 மொத்தம் பரிசுத் தொகையாக 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இந்த போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கும் குதிரை வண்டிகளுக்கும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்,
ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன், ஆனையூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

– நா.ரவிச்சந்திரன்