Save 20% off! Join our newsletter and get 20% off right away!

உத்திரமேரூர்-கல் குவாரி, ‘கிரஷர்’களிலிருந்து வெளியேறும் புகை …கிராமங்களில் சுகாதார பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு அனுமதி பெற்று 51 தனியார் கல் குவாரிகள் இயங்குகின்றன. இதில், உத்திரமேரூர் ஒன்றியத்தில் மட்டும் 24 கல் குவாரிகள் இயங்குகின்றன. மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான குவாரிகள் மதுார், சிறுதாமூர், அருங்குன்றம் உள்ளிட்ட பல கிராமங்களில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இயங்குகின்றன

உத்திரமேரூர் ஒன்றியத்தில், சிறுமையிலுார், பினாயூர், பழவேரி ஆகிய 3 கிராமங்களில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்கள் விலைக்கு பெற்றுள்ளது. அந்த இடங்களில் புதிதாக கல் குவாரிகள் அமைக்க, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளது.
புதிய 3 கல் குவாரிகளுக்கு அனுமதி பெறுவதற்கு முன்
நவம்பர் 21, 2024
கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், திருமுக்கூடல் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.

கனிம வள நிதி உதவி இயக்குனர் வேடியப்பன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பிரகாஷ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடைப்பெற்றது
சிறுமயிலுார், பினாயூர், பழவேரி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர், 100க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்
கூட்டத்தில் கிராமத்தினர், விவசாய அமைப்பினரும் கலந்துகொண்டு  ஆதங்கத்தையும் தங்களின் எதிர்ப்பையும் தெரிவித்து இருந்தனார்

*இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை*

உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் செயல்படும் கல் குவாரி மற்றும் ‘கிரஷர்’களில் இருந்து பரவும் புகை, புழுதி போன்றவற்றால் பல்வேறு சுகாதார பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அரசு அதிகாரிகள் இதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளதாகவும், பகுதிவாசிகள் குற்றம்சாட்டி உள்ளனர்
ஏற்படுவதோடு, அச்சாலைகளில் தார்ப்பாய் போர்த்தாமல் இயங்கும் லாரிகளில் இருந்து சிதறும் மண், எம்.சான்ட் மணல் போன்றவை, சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் பரவுகின்றன.
இந்த புகை, சாலைகளில் இருந்து பரவும் மண்புழுதியால், கிராமவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள், மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர்.
புகை மற்றும் புழுதி கலந்த காற்றை சுவாசிப்பதால், பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக, பகுதிவாசிகள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம மக்கள் கூறுகையில்  
கல் குவாரி மற்றும் சாலைகளையொட்டி, ‘கிரஷர்’கள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில் இருந்து, கிராம சாலை வழியாக இரவு, பகலாக வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால், அச்சம் ஏற்படுகிறது.
இதனால், வீடுகளில் புழுதி படிகிறது. பொதுமக்களும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து, அதிகாரிகளிடத்தில் முறையிட்டும், எந்த தீர்வும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்

கல் குவாரி மற்றும் கிரஷர் செயல்பட உரிமம் கோரி, சுகாதாரத் துறையிடம் விண்ணப்பிக்கும் போது, லோடு லாரிகளில் தார்ப்பாய் போர்த்தி இயக்க வேண்டும், சாலைகளில் ஒரு நாளைக்கு 3 முறை தண்ணீர் தெளிக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி அனுமதி வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக கலெக்டர் பங்கேற்பு கூட்டங்களிலும், அவ்வாறே அறிவுறுத்தப்படுகிறது. இதை தொழிற்சாலை நிர்வாகத்தினர் பின்பற்றாதது குறித்து, மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்

நிபந்தனையுடன் அனுமதி

கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து வெளியேறும் மாசு கலந்த காற்றை சுவாசிப்பதால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை நுரையீரல் சம்பந்தமான நோய் தாக்குதலுக்கு உள்ளாவர்கள்

– பா.மணிகண்டன்