தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எல்லைகளை கல்ராயன்மலை என்றும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எல்லைகளை கல்வராயன்மலை என்றும் அழைப்படுகிறது. இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதி ஆகும். பச்சைமலை, ஜவ்வாது மலைகள், சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்தி-ருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. 1,095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2,000 முதல் 3,000 அடி வரை உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கல்ராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடபகுதி ‘சின்னக் கல்ராயன்’ மற்றும் தென்பகுதி ‘பெரிய கல்ராயன்’ என்று குறிப்பிடப்படுகின்றது. ‘சின்னக் கல்ராயன்’ மலைகள் சராசரியாக 2,700 அடி உயரமும், ‘பெரிய கல்வராயன்’ மலைகள் சராசரியாக 4,000 அடி உயரமும் கொண்டவை.
இங்கு வாழும் மக்கள் மலையாளி எனப்படும் பழங்குடி காஞ்சிபுரத்தில் இருந்து இடம்பெயர்ந்த போர்வீரர்கள் என்று கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் சவ்வாதுமலையின் தெற்கு முனையிருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் கல்வராயன் மலைகள் உள்ளது. இது மலையாளி என்றழைக்கப்படும் மக்களின் பூர்வீக வாழ்விடமாகும். இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர், மேற்குப்பகுதி சங்கராபுரம் வரையும், வடதிசையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வரையிலும் பரவியுள்ளது.
கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன. கல்வராயன்மலையைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகள் வடமேற்கு பருவகாற்றின் மூலமாக மழையைப்பெறுகிறது. கோமுகி ஆறு இம்மலையில் உற்பத்தியாகி காவிரிக்கு இணையாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது. இந்த மலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் காணப்படுகிறது. இந்த மலையின் மேற்கே சேலம், தருமபுரி மாவட்டம், கிழக்கே விழுப்புரம் மாவட்டம், வடக்கே திருவண்ணாமலை மாவட்டம் ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன.
சேலத்தில் இருந்துவரும் வழியில் கல்ராயன்மலை அடிவாரத்தில் கரியகோயில் நீர்தேக்கமும், அதையொட்டி அழகிய பூங்காவும் உள்ளது. கள்ளக்குறிச்சியிலுடருந்து வரும் வழியில் கல்வராயன்மலையடிவாரத்தில் மலைகளுக்கிடையில் கோமுகி அணையும், அதையொட்டி சுமார் 15 ஏக்கர் அளவில் அழகிய பூங்காவும் உள்ளது. பூங்காவில் பயணிகள் இளைப்பாறவும், கழிப்பிடம் செல்லவும் தனி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மான்கொம்பு நீர்வீழ்ச்சி,மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற அருவிகள் காணப்படுகின்றன. குளியலறை வசதிகளும் அருவிக்கு அருகில் செய்யப்பட்டுள்ளன.மலையில் உள்ள ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, படகு குழம் உருவாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் படகில் சென்று வரலாம். காட்டுப் பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளைத் காணும் வாய்ப்பும் கிடைக்கலாம். கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் வசதிக்கு ஏற்ப, வனத்துறையினர் விடுதிகள் அமைத்திருக்கின்றனர். அங்கு தங்க முன் அனுமதி வாங்கிச் செல்ல வேண்டும். இல்லை என்றால் காலையில் சென்று, மாலையில் திரும்பலாம்.
கல்வராயன் மலைக்கு அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் ஏத்தாப்பூர், விழுப்புரம் மற்றும் சின்னசேலம் தொடர்வண்டி நிலையமாகும். அங்கிருந்து பேருந்தில் கல்வராயன் மலை செல்லலாம். சேலத்தி-ருந்தும், கள்ளக்குறிச்சியி-ருந்தும் அடிக்கடி பேருந்து வசதி இருக்கிறது.
தமிழ்நாட்டின் ஏழைகளின் மலை பிரதேசம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் பழங்குடியினர் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக சில கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு கோடைக்கால விழாவை நடத்துகிறது.
ஆனால் இங்குள்ள மக்களுக்கு என்ன பிரச்சனை என்றால் வனப்புரிமைச் சட்டத்தின் படி கொடுக்கக்கூடிய பட்டாவிற்கு மதிப்பு இல்லை வருவாய் வட்டாட்சியர் மூலம் கொடுக்கக்கூடிய பட்டாவுக்கு தான் மதிப்பு அதிகம் எனவும் இங்கு கொடுக்கக்கூடிய பட்டா நிலத்திற்கு பொருளாதார ரீதியாக வங்கி கடன் விவசாய நலத்திட்டங்கள் என பல இருந்தும் நம் மக்களால் அரசு திட்டத்திலும் சரி வங்கி கடனிலும் சரி பயன் பெற முடியாத சூழ்நிலை தான் இருந்து வருகிறது இதனால் இங்குள்ள மக்கள் இடம் பெயர்ந்து பிழைப்பு நடத்துவதற்காக வெளிமாநிலம் செம்மரம் சந்தன மரம் சாராயம் காய்ச்சுவது என இதுபோன்று வேலைகளுக்கு தவறான பாதையில் செல்லும் சூழ்நிலை இந்த அரசு உருவாக்கி இருப்பதாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் கல்வராயன் மலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கியமான பகுதி இந்த கல்வராயன் மலை சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அடக்கம் சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் சவாலாக இருந்தது முக்கியமான இந்த சம்பவம் இந்த மாவட்டத்தில் கனியாமூர் பள்ளி சிறுமி இறப்பு குறித்து கலவரமாக ஆனதும் எந்த மாவட்டம் தான் பல அரசியல்வாதிகளில் சூழ்ச்சியாலும் அவர்களின் பொருளாதாரம் வருமானம் சொத்து மதிப்பு ஈட்டுவதற்காக பலரை பலி கெடாவாக ஆக்கப்பட்டது இந்த மாவட்டம் பல ஆட்சியர்கள் உள்ளிட்ட பல அரசு துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள் இந்த மாவட்டத்தை சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியை திமுக எம்எல்ஏ உதயசூரியன் கட்டுப்பாட்டிலும் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ செந்திலும் உள்ளனர் அதேபோல ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிகள் வசந்த கார்த்திகேயன் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் மணி கண்ணன் இதில் உள்ளார் ஆக மொத்தத்தில் திமுக எம்எல்ஏ கலின் கட்டுப்பாட்டில் தான் இந்த மாவட்டம் அடங்கியுள்ளது
ஏழைகளின் ஊட்டியாக இருக்கக்கூடிய கல்வராயன் மலையில் மலைவாழ் மக்கள் பெரும் அளவில் வசித்து வருகின்றன இங்கு பல பகுதிகளுக்கு பேருந்து வசதியே இல்லை ஆனால் அங்கு உள்ள பூர்வ குடிகளுக்கு வன உரிமை சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே பட்டா வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது,
ஆனால் தற்போது தமிழகத்தில் திமுக அரசாங்கம் நடைபெற்று வருகிறது அந்த அரசாங்கத்தின் கீழ் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக செயல்பட்டு வரும் உதயசூரியன் காட்டுயிர் வாரிய உறுப்பினராக இருந்து வருவதால் கல்வராயன் மலை மக்களின் முக்கிய கோரிக்கையான தங்களின் வசித்து வரும் வீடுகளுக்கும் விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கும் வருவாய் துறை மூலம் பட்டா வழங்க முடியும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்து வருகின்றனர் ஆனால் இதற்கு சிறிதும் செவிசாய்க்க மறுத்து வரும் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் திமுக உதயசூரியன் கல்வராயன் மலை மக்களின் அறியாமையால் அவர்களிடமிருந்து வாக்குகளை மட்டுமே பெற்று வரும் நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த சிறிதும் யோசிப்பது கிடையாது என அந்தப் பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை எப்போதுதான் இந்த சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் பேசப் போகிறார் என பேசு பொருளாகி வருகிறது, இதேபோன்று கல்வராயன் மலை பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென அந்த கல்வராயன் மலை மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள நிலையில் இதுவரை சுற்றுலாத்தலமாக அறிவிக்க இந்த அரசாங்கம் முன் வரவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர், கல்வராயன் மலைப்பகுதியில் மான் கொம்பு, மேகம், பெரியார் உள்ளடக்கிய பல்வேறு நீர்வீழ்ச்சிகள், சிறுவர் பூங்கா, படகு இல்லம் என பல்வேறு பொழுதுபோக்கு இடங்கள் இருந்து வருகின்றனர் மழைக்காலங்களிலும் வெயில் காலங்களிலும் பொதுமக்கள் அங்கு சென்று பார்வையிட்டோம் ரசித்தும் வருகின்றனர் ஆனால் இதை மேம்படுத்தி அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட சுற்றுலா தளமாக அறிவித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு என்னை உருவாக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்களின் பெரும் கோரிக்கையாக இருந்து வருகிறது, ஆனால் ஆட்சி அமைத்து நான்காண்டுகள் முடியும் தருவாயில் இதுவரை கல்வராயன் மலையை சுற்றுலா தளமாக அறிவிக்க தமிழக அரசு மறுப்பது ஏன் என அந்த மலைவாய் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் என்றாலே கள்ளச்சாராயத்திற்கு பெயர் போன மாவட்டம் என்று பொதுமக்களின் மத்தியில் பேசு பொருளாக இருந்து வரும் நிலையில் இதை மாற்ற கல்வராயன் மலை சுற்றுலாத்தலமாக அறிவித்து அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழித்து போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்களை தடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மற்றும் பொருளாதாரத்தில் எப்போதுதான் இந்த அரசு முன்னேற்றம் அடையச் செய்யும் என அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்ப்பு என தெரிவித்து வருகின்றனர்.
– இரா.நந்தகோபாலகிருஷ்ணன்
Leave a Reply