இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் மோடிக்கு எதிராக தீவிரமாக களம் கண்டவர்களில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் முதல் இடத்தில் இருக்கிறார்
இதே சமயத்தில் இந்தியா கூட்டணி மூலம் ராகுல் காந்தியுடன் மிகவும் ஐக்கியம் ஆகிவிட்ட நிலையில் மு க ஸ்டாலின் மீது பிரதமர் மோடி மிகுந்த கோபம் வைத்திருக்கிறார்
முன்னதாக நடந்து முடிந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களிலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை என்ற கோபம் மோடிக்கு கடந்த பத்து ஆண்டுகளாக உண்டு
எனவேதான்இந்த முறை அதனை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக ஏராளமான திட்டங்களை வகுத்து பிரதமர் மோடி செயல்படுத்தினார் அவரது உத்தரவுகளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மிக வேகமாக செயல்பட்டார
உச்சகட்டமாக பிரதமர் மோடி பலமுறை தமிழகத்திற்கு வந்தது மட்டுமல்லாமல் சாலை பேரணியும் நடத்தினார்
பாரதிய ஜனதா கட்சி எவ்வளவோ முயற்சிகள் செய்த நிலையிலும்
தற்போது வெளிவந்த ஏராளமான கருத்துக்கணிப்புகள் தமிழகத்தில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன
பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிரத்யேக சர்வே தகவலும் இதையேதான் சொல்லி இருக்கிறது
இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக தற்பொழுது பிரதமர் மோடியின் பார்வை மு க ஸ்டாலின் பக்கம் திரும்பி இருக்கிறது
பிரதமர் மோடியின் இந்த பார்வை சாதாரண பார்வை அல்ல இது ஒரு வகையான சனி பகவான் பார்வையாகும் என்கிறார்கள் டெல்லி மேலிடத்தினர்
தேர்தல் முடிவடைந்ததும் ஸ்டாலின் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன
இது தொடர்பாக லஞ்சம் மற்றும் ஊழல் வழக்கு… அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு என ஏதாவது ஒரு வழக்கில் மு க ஸ்டாலின் சிக்க வைக்கப்படலாம் என்கிறார்கள்
இதன் மூலம் மு.க ஸ்டாலினை கை செய்வதற்கான முகாந்திரமும் இருக்கின்றன
இது மட்டுமல்ல தமிழகத்தில் எங்காவது ஒரு சில இடங்களில் வன்முறைச் சம்பவம் நடைபெற்றாலோ அல்லது சாதியை சண்டைகள் ஏற்பட்டாலோ ஏதோ ஒரு காரணத்திற்காக தமிழக சட்டசபை கலைக்கப்படலாம் என்றும் பேசிக் கொள்கிறார்கள்
இது பற்றிய தகவல்கள் அனைத்தும் முக ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும் .
பிரதமர் மோடி வட மாநில செல்வாக்குகள் மூலம் மீண்டும் பிரதமராக வாய்ப்பு இருக்கிறது எனவே அவர் பிரதமராகும் பட்சத்தில் நிச்சயமாக தன் மீது பழிவாங்கும் படலத்தை தொடங்குவார் என்பதை மு க ஸ்டாலின் உணர்ந்துதான் இருக்கிறார்
பிரதமர் மோடி ஏதாவது ஏவுகணை தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு என்ன செய்வது என்பதற்கான திட்டங்களையும் மு.க ஸ்டாலின் இப்போதே வகுக்க தொடங்கி விட்டார்
இதற்காக பிரசாந்த் கிஷோர் தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டு அவருக்கு பல கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில் பிரதமர் மோடி பழிவாங்கும் படலத்தை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளும் தற்பொழுது நடைபெற்று வருகின்றன
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply