மேஜர் முகுந்த் மற்றும் அவருடைய குழுவை சேர்ந்த சிப்பாய் விக்ரம் மற்றும் ராணுவ வீரர்கள் நடத்திய ஆபரேஷன்கள் பற்றிய திரைப்படம் மற்றும் அவருடைய திருமணம் மற்றும் குடும்பத்தை பற்றி சொல்கிறது. உண்மை கதை என்பதால் மேஜரின் மனைவி இந்து அவர்கள் கதையை சொல்வது போல் திரைப்படம் அமைந்துள்ளது. மேஜராக சிவகார்த்திகேயனும், இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளார்கள் என்பதைவிட வாழ்ந்துள்ளார்கள் என்று சொல்வதே சிறந்தது.
ஒவ்வொரு ராணுவ வீரரும் தங்களுடைய சொந்த விருப்பங்களை, குடும்பங்களை விட்டுவிட்டு நாட்டிற்காக தங்களுடைய வேலையை எப்படி செய்கிறார்கள் என்பதை ஆழமாக சொல்லி உள்ளார்கள்.
களத்தில் எவ்வளவு அபாயங்களை எதிர்கொள்கிறார்கள் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட அவர்கள் செய்யும் வேலை அதன் மதிப்பு பல மடங்கு அதிகம். அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்கள் மட்டுமே இராணுவத்தில் சேர முடியும்.
இந்த படத்தில் மறைந்த சிப்பாய் விக்ரம் பற்றியும் சொல்லி உள்ளார்கள். தன்னுடைய தந்தை,தாத்தா, கொள்ளு தாத்தா, கடந்து அவர் நான்காவது தலைமுறை ராணுவ வீரர். தனக்குப் பின் தன் மகனும் ராணுவத்திற்கு வருவார் என்று சொல்லும் பொழுது அவர்கள் ராணுவத்தை எப்படி நேசிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
பார்ப்பவர்கள் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக சண்டைக் காட்சிகளும் காதல் காட்சிகளும் மாறி மாறி திரைப்படத்தில் அமைந்துள்ளது. முகுந்த் வரதராஜனின் குழந்தைக்கு அவர் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியார் பாடலை சொல்லிக் கொடுக்கும் பொழுதும், அவருடைய மகள் ஒவ்வொரு முறையும் தந்தை எப்பொழுது வருவார் என்று ஏங்கித் தவிக்கும் பொழுதும் சிவகார்த்திகேயன் முகுந்தாகவே வாழ்ந்துள்ளார்.
இறுதிக்காட்சியில் மேஜர் முகந்திற்க்கு அவருடைய மகள் அஞ்சலி செலுத்தி அனுப்பி வைக்கும் காட்சிகள் எல்லாம் இதயத்தில் ஈட்டிய வைத்து கிழிப்பது போன்ற உணர்வை தருகிறது.
அமரன் இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கப் போகும் ஒரு திரைப்படம். ராணுவத்தின் மரியாதையை இன்னும் பல மடங்கு உயர்த்தி உள்ளது. சிவகார்த்திகேயன் அவர்களும் சாய் பல்லவி அவர்களும் நிச்சயம் போற்றப்படுவார்கள்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்…
இப்படி ஒரு சிறந்த படத்தை தயாரித்த ராஜ்கமல் பிலிம்ஸ் கமல்ஹாசன் அவர்களுக்கு ஒரு சலியூட்
– செ.பகவதிமுருகன்
Leave a Reply