உசிலம்பட்டி-ஆவினுக்கு செல்லும் பாலில் தண்ணீர் கலக்கறாங்க?

உசிலம்பட்டி அருகே, ஆவீனுக்கு செல்லும் பால் கேன்களில் தண்ணீர் கலந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்
தியுள்ளது – பால் கலந்து கொண்டிருந்த போது அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கண்டுபிடித்த காட்சிகள் சமூக வலை
தளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொப்பம்
பட்டி கிராமத்தில், உள்ள ஆவின் பால் உற்பத்தி நிலையத்
திலிருந்து, தினசரி மதுரை ஆவினுக்கு 30-க்கும் மேற்பட்ட கேன்களில் பால் கொண்டு செல்லப்
படுகிறது.
கடந்த சில மாதங்களாக இந்த மையத்
திலிருந்து ஆவினுக்கு கொண்டு வரப்படும் பால் தரமற்ற நிலையில் உள்ளதாக புகார் எழுந்த சூழலில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் பொது
மக்களிடமிருந்து பெறப்படும் பால்-யை மதுரை ஆவினுக்கு கொண்டு செல்லும் வழியில்
 நிறுத்தி தண்ணீர் கலப்பதை கண்டறிந்து அதிர்ச்
சியடைந்த அதிகாரிகள் வாகன ஓட்டு
நரிடமிருந்து, தண்ணீர் மற்றும் தண்ணீர் கலந்த பாலையும் பறிமுதல் செய்தனர்.
இந்த பாலில் தண்ணீர் கலந்த வீடியோ மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சிகள்
சமூக வலை தளங்களில் வெளியாக தற்போது வைரலாகி வருகிறது.

– நா.ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *