கவர்னர் ரவி மீண்டும் சேட்டை..விடுபட்ட தமிழ்த்தாய் வாழ்த்து வரிகள்..மன்னிப்பு கேட்ட தூர்தர்ஷன்..

தமிழக ஆளுநராக ஆர்என் ரவி க்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் சென்னை  தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி சார்பில் இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தில் “தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் விடுபட்டது.. இது சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு  முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஆளுநர் ஆர்என் ரவியையும் முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது தமிழக ஆளுநர் ஆர்என் ரவி விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து ‘திராவிடம்’ என்ற சொல்லை வைத்து தொடர் சர்ச்சைகள் எழுவது ஒன்றும் புதிது அல்ல.. இந்த பிரச்னை மத் திய பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எனவே

இதற்கு டிடி தமிழ் நிர்வாகம், மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. , அவர் பேசும்போது, “இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளன. பிரித்தாளும் கொள்கை வெற்றி பெற்றதில்லை” என புலம்பி இருக்கிறார்.மதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் தவிர்த்துவிட்டுப் பாடச் சொல்வாரா?” எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது பதிவில், “முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.நிலைமை  எல்லை மீறி போய் விட்டது.. இது குறித்து முதல்வர் கூறியதாவது.இதற்கு மீண்டும் பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த காலங்களில் ஆர்.என்.ரவி பேசிய சம்பவங்களைப் பட்டியலிட்டார்.அதில், “தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்” என்றும் “திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்” என்றும் கூறியதை மறக்க முடியுமா.தி ராவிட மாடல் காலாவதியான கொள்கை’ என ஆங்கில நாளேட்டுக்குப் பேட்டி அளித்த வெறுப்பு, இன்று தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறதுதமிழை நேசிப்பதாக இப்போது சொல்லும் நீங்கள் முன்பு, திருவள்ளுவர் படத்தைக் காவி நிறத்தில் ஏன் வெளியிட்டீர்கள் எனச் சொல்ல முடியுமா?” ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து அரசியல் சட்ட நெறிமுறைகளை மறந்து நாள்தோறும் அரசியல் பேசுவதும், ஆளுநர் மாளிகையை அரசியல் அலுவலகமாக மாற்றியதும், திராவிட இனத்தையே கொச்சைப்படுத்திப் பேசி வருவதும் எந்த வகை அரசியல் நாகரிகம்?” எனவும்  கேள்வி எழுப்பியுள்ளார்.இதற்கு எடப்பாடி பழனிசாமி. ஜி. கே. வாசன், டாக்டர் ராமதாஸ். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கள் என கண்டனம் தெரிவித்து உள்ளனர்.டி.டி தமிழ் இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடே கொதித்தெழும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து திராவிடநல் திருநாடு எனும் வரியை நீக்கி பாடப்பட்டதை கண்டித்து சென்னை ராயப்பேட்டையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு 1000 அஞ்சல் அனுப்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஇது குறித்து அமைச்சர் சேகர் பாபு கூறும்போது,நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, தினம் தினம் ஏதேனும் ஒரு வகையில் பரபரப்பை உண்டாக்க வேண்டும், தன்னை நோக்கி ஊடகங்கள் வர வேண்டும் என்ற நினைப்பில் பல செயல்களை செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர். அவரின் கருத்துகளுக்கு, பதிலடி கொடுப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் பின்வாங்க மாட்டார். அதற்கு உண்டான நடவடிக்கைகளிலும் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக இருப்பார். ஆளுநர் பேச்சு அன்றோடு போச்சு” என்று தெரிவித்தார்.இப்படி சர்ச்சை தொடரும் வேளை யில்  விரைவில் ஆளுநர் மாற்றம் உறுதி என தகவல் வெளியாகி உள்ளது

இந்நிலையில் ஆளுநர்கள் நியமன நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

– ஆர். அருண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *