கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது பாண்டிசேரி சாலை, சேலம் சாலை, வேலூர் சாலை, பெங்களூரு சாலை என நான்கு முக்கிய வழிதடங்களை இணைக்கும் மைய புள்ளியாக ஊத்தங்கரை இருக்கிறது. போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைகளை இணைக்கும் பகுதியாக உள்ளதால் சாலை விபத்துக்கள் ஏற்பட்டால் அருகில் உள்ள ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு தான் முதலுதவிக்கு பாதிக்கப்பட்டவர்கள் வருகின்றனர் அதன் பின்பு தான் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கின்றனர். மிகவும் குறைந்த அளவே மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படும் மேற்படி அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றுபவர் மருத்துவர் மதன்குமார் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை பல ஆண்டுகாலமாக பல மருத்துவ அதிகாரிகளை பார்த்துள்ளது அதேபோல தான் சற்று வித்தியாசமான மருத்துவர் மதன்குமார் ஏழை எளிய மக்களின் நலனுக்காக மருத்துவ சேவையில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியை ஆற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்ற பின்பு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மருத்துவம் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே சுத்திக்கரிக்கப்பட்ட குடிநீர் வசதி நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் கழிவறை வசதிகள் போன்றவற்றை சிறந்த முறையில், அரசு மருத்துவமனை மருத்துவர் மதன்குமார் மூலம் புதிய பொலிவு பெற்றுள்ளது. உடன் பணி புரியும் மருத்துவர், செவிலியர்களை கொஞ்சம் கண்டித்து வேலை வாங்குவதால்… தலைமை மருத்துவர் மதன்குமார் மீது ஒரு சில மருத்துவர்கள் செவிலியர்கள் இவரை பழிவாங்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர் அவர்கள் எதிர்பார்த்து போல் செவிலியர் ஒருவர் கடந்த 7ம்தேதி தலைமை மருத்துவர் மதன்குமார் மீது புகார் ஒன்று அளித்துள்ளார். பணிநேரம் முடிந்தும் பணி செய்ய சொல்கிறார் என்றும் மேலும் மனதளவில் என்னை துன்புறுத்துகிறார் எனக் கூறி நிரழிவு நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை 15க்கும் அதிகமான மாத்திரையை சாப்பிட்டுவிட்டார். விஷயம் உடன் பணிபுரியும் செவிலியர் மூலம் அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செவிலியர் தலைமை மருத்துவர் மதன்குமார் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இதை அறிந்து ஊத்தங்கரை மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது.., அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தலைமை மருத்துவர் மதன்குமார் சற்று கண்டிப்புடன் கூடிய நேர்மையான அதிகாரி தான்! ஏன் அவர் வேலை நேரத்தில் பணியை ஒழுங்காக செய்தால் அவர் எதற்காக கண்டிக்கிறார் நாம் நம் பணியை ஒழுங்காக செய்தால் போதும் நம்மை யாரும் குறை சொல்ல முடியாது என்று பேசிக்கொண்டே கிளம்பிவிட்டார். இதைப்பற்றி பாதிக்கப்பட்ட செவிலியரின் உறவினரிடம் விசாரித்தபோது தலைமை மருத்துவர் மதன்குமார் என்னை மட்டும் அதிக நேரம் வேலை வாங்குவதாகவும் தகாத வார்த்தை பயன்படுத்துகிறார் என்றும் கூறினார்கள். பலமுறை மாவட்ட இணை இயக்குனர் அவர்களிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் மன உளைச்சல் தாங்காமல் மாத்திரை சாப்பிட்டதாக உறவினர்கள் தரப்பில் கூறுகின்றனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது.., பாதிக்கப்பட்ட செவிலியரிடம் விசாரித்தோம் புகார் பெறப்பட்டுள்ளது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர். மருத்துவ அதிகாரி மதன்குமாரை தொடர்பு கொண்டபோது.., நான் படித்த ஊத்தங்கரை மக்களுக்கு சேவை செய்யும் லட்சியத்தோடு தான் எவ்வளவோ இடர்பாடுகளிலும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன்.
என் மீது வரும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் தொடர்பு கொண்டால் உண்மையான விளக்கத்தை அளிக்க எப்போதும் தயாராகவே இருக்கிறேன். எவ்வளவு தடைகள் வந்தாலும் நான் வளர்ந்த , என்னை கல்வி அறிவு பெற்று ஆளாக்கிய இந்த மக்களுக்கு சேவையாற்றுவதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்கிறார் தன் தரப்பில்.
அரசு மருத்துவமனையில் அத்தி பூத்தார் போல் எப்போதாவது ஒருமுறை தான் நேர்மையான அதிகாரிகள் வருகின்றனர் அவர்களுக்கும் இந்த நிலைமையா ????
– பாலாஜி மணி
Leave a Reply