காரைக்குடியில் நேற்று மாநகராட்சி ஆனபிறகு முதல் மாமன்ற கூட்டம் மேயர் எஸ்.முத்துதுரை தலைமையில் நடைபெற்றது..
இக்கூட்டம் மிகவும் பரபரப்பை ஏற்டுத்திவிட்டது
மாமன்ற கூட்டத்தில் நிர்வாக தவறுகளை எதிர்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டும் போது அதற்கு மேயர் அவர்கள் தன்மையுடன் பொறுமையுடன் தான் பதிலளிக்க வேண்டும்..
தான் செய்வதுதான் சட்டம் என்று அதிகார போக்கில் கூட்டம் நடத்தக்கூடாது..
அதேபோல மாமன்ற உறுப்பினர்களை அவன் இவன் என்று மேயர் அவர்கள் ஒருமையில் பேசுவதும் தவறானது..
மன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு என்ன மரியாதை தரவேண்டுமோ அதை மேயர் அவர்கள் தரவேண்டும்..
அதுபோல் அல்லாமல் மன்ற உறுப்பினர்களை ஏன் தனது கட்சிக்காரர் களையே கூட ஒருமையில் பேசுவது அவனை தூக்கி வேளியே போடு என்று பேசுவது எதைக்காட்டுகிறது..
அது அதிகாரத்தின் போதையையே காட்டுகிறது..
யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல..
அவரவருக்கு அவரவர் ராஜாதான்..
ஒரு உறுப்பினர் பேசும்போது மற்ற உறுப்பினர்கள் அமைதிகாக்க வேண்டும் அதுதான் நாகரீகம்..
எல்லா உறுப்பினர்களுக்கும் சம அதிகாரம் மாமன்றத்தில் உள்ளது.
ஒரு உறுப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு மேயர் மட்டுமே பதிலளிக்கும் அதிகாரம் உள்ளவர்..
மன்ற உறுப்பினர்கள் பேசும்போது மேயர் அவர்களை தவிர மற்ற மன்ற உறுப்பினர்கள் இடைமறித்து பேசுவது நாகரீகமல்ல..
அவரவர்களுக்கு நேரம் தரும்போது பதிலளிக்கலாம் கேள்வி கேட்கலாம்..
அதை விடுத்து மற்ற உறுப்பினர்கள் எழுந்து பேசினால் ஏதோ திட்டமிட்டு தவறுகள் மறைக்கப்படுகிறது என்பதே கடந்த கால வரலாறு..
மாமன்றம் ஒன்றும் குஸ்தி போடும் இடமல்லவே..
அதே போல அனைவரையும் மதிக்கும் பண்பு பொறுமை இவற்றை மேயர் அவர்கள் கடைபிடிக்க வேண்டும்..
எதிர் கட்சி உறுப்பினர் கேட்கும் கேள்விக்கு மேயர் அவர்களை மீறி மற்ற ஆளுங்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் இடைமறித்து வாக்குவாதம் செய்தால் அங்கே மேயர் அவர்களை அந்த உறுப்பினர் மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்..
தலை இருக்க வால் ஆடுவது ஏன்..?
இது மக்களுக்கு சந்தேகத்தைத்தானே உண்டாக்குகிறது..
அப்படி என்றால் மாமன்றத்தில் கேள்வியே கேட்க கூடாதா..
அது என்ன வாய்ப்பூட்டு சட்டமா போடப்பட்டு இருக்கிறது…?
அதைவிட பத்திரிக்கையாளர்கள் நாட்டின் தூண்கள்..
அவர்கள்தான் நமது செயல்களை மக்களிடம் கொண்டு செல்பவர்கள்..
அவர்களையும் தவறாக பேசுவது தவறானது..
முதல் மாமன்ற கூட்டமே இப்படி நடந்தது கரும்புள்ளி ஆகிவிட்டது..
எந்த பதவியும் யாருக்கும் நிரந்தரமல்ல என்பதை மட்டும் அனைவரும் உணர்ந்து நடந்து கொண்டால் சிறப்பானது என்று மக்கள் பேசுகின்றனர்.
———————
போக்குவரத்து மிகுந்த இடத்தில் பதவியேற்பு
மேயர் முத்துதுரை அலப்பறை
———————
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைச்சர்கள் கே என் நேரு, கே ஆர் பெரியகருப்பன்,
எஸ்.முத்துதுரை அவர்களுக்கு மேயர் அங்கியை அணிவித்தனர்.
இதற்கான விழா காரைக்குடி நகராட்சி முன்பாக போக்குவரத்து மிகுந்த ரோட்டின் குறுக்கே பிரமாண்டமான பந்தல் அமைத்து நடைபெற்றது.
சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித்,முன்னாள் அமைச்சர் தென்னவன், சிவகங்கை
எம்.பி.கார்த்தி ப.சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் பங்கேற்கவில்லை, இது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.. தமிழரசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோட்டையூர் என் சுந்தரம், சுப துரைராஜ்,,
கே ஆர் ராமசாமி, மேயர் முத்துத்துரை மனைவி, மகள், மருமகன், பேரன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநகராட்சி ஆணையாளர் சித்ரா வரவேற்றார். நகர்மன்ற உறுப்பினராக இருந்த கவுன்சிலர்கள் இன்று
மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்க இருக்கின்ற நிலையில் நேராக மேயர் ஆக பதிவி ஏற்று உள்ளார் முத்து துறை அவர்கள் இடங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில் காரைக்குடியில் உள்ள போக்குவரத்து மிகுந்த இடத்தை தேர்வு செய்வதற்கான காரணம் என்ன இவ்வளவு பெரிய ஹோட்டல்கள் இருந்தும் நடுரோட்டில் அதுவும் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் மெயின் ரோட்டில்.,அங்கே அருகே பள்ளிகளில் உள்ளன மெயின் ரோட்டில் பந்தல்கல் அமைத்து மக்களுக்கு இடையூறாக இந்த பதவியேற்பு விழா நடைபெற வேண்டுமா என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்.., ஏற்கனவே பாதசாரி கடைகளுக்கு அதிக சந்தா வசூலிப்பதாக புகார் எழுந்த வண்ணங்கள் உள்ளன., நாளுக்கு நாள் இவர் மீது அடுக்கு அடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது… மாமன்ற முதல் கூட்டத்திலேயே அதிமுக மாமன்ற உறுப்பினரை ஒருமையில் திட்டி உள்ளார்., மாமன்ற உரிப்பினர் மற்றும் பத்திரிக்கையாளர்களை யும் தர குறைவாக பேசியுள்ளார்.,மான்றதின் முதல் கூட்டத்தில் இவ்வளவு அராஜகம்.. காரைக்குடியில் எங்கு சென்றாலும் மக்கள் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர்
நாளுக்கு நாள் அவரின் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன இப்பொழுது என்ன அவசரம்?
இன்னும் முடிய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன காரைக்குடி மாநகராட்சியில் இன்னும் பல பணிகள் கிடப்பில் கிடக்கும்போது இவ்வளவு அவசரமாக அவர் மேயர் பதவி ஏற்பதற்கான காரணம் என்ன என்று மக்கள் புலம்புகின்றனர்.
– பகவதி முருகன்
Leave a Reply