Save 20% off! Join our newsletter and get 20% off right away!

திருச்சியில் நடந்த ராணுவ பஞ்சாயத்து

திருச்சி சந்திப்பில் இருந்து சென்னை புறவழிச் சாலையை இணைக்கக்கூடிய மன்னார்புரம் என்ற இடத்தில்  மேம்பாலப் பணி நடந்துவந்தது.  அந்த இடத்துக்கு நடுவே ராணுவத்துக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலம் இருந்ததால் பாலப்பணி  கிடப்பில் போடப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பணி நிலுவையில் இருந்த நிலையில், தற்போது மேம்பாலம் கட்டிக்கொள்வதற்காக அரை ஏக்கர் நிலத்தை ராணுவ உயரதிகாரிகள் மனமுவந்து கொடுத்திருக்கின்றனர்.

இதையடுத்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் முயற்சியால் தான் ராணுவம் நிலம் கொடுத்ததாக கூறி அவரது ஆதரவாளர் நன்றி பேனர் வைக்கத் தொடங்கினர். என்னடா இது வம்பாப் போச்சு என்று அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் விளம்பரன் தேடத்தொடங்கினர்.  அமைச்சரின் தொடர் முயற்சியால் தான் ராணுவம் நிலம் கொடுத்ததாக அவர்கள் சுவரொட்டி ஒட்டினர்.  பேனர்களும் வைத்தனர். 

இந்த களேபரங்களுக்கு மத்தியில் அதிமுகவும் இந்த விவகாரத்தில் உரிமைக் கொண்டாடத் தொடங்கியுள்ளது. இதனால் திருச்சி அரசியல்வாதிகள் கொடுக்கும் இந்த பில்டப்களை பார்க்கும் போது தாங்க முடியலடா சாமி என்கிற நடிகர் விவேக்கின் நகைச்சுவை வசனம் தான் நினைவுக்கு வருவதாக கூறுகிறார்கள் பொதுமக்கள். ஜங்ஷன் மன்னார்புரம் இடையே மேம்பாலப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி கட்சிகள் தாமே? கூட்டு முயற்சி என்று கூறி பெருந்தன்மையாக விட்டிருக்கலாம்.  இவர்கள் போட்ட சண்டைக்கு மத்தியில் நாங்கள் செய்த முயற்சியை மறந்துவிடவேண்டாம் என்று அதிமுகவினரும் இடையில் புகுந்து பிரசாரம் செய்தனர்.

அட சாமிகளா, சாலை வசதி கருதி இடம் கொடுத்தது குற்றமா? எல்லோருடைய ஏற்பாடும்தாம் என்று வைத்துக்கொள்ளுங்கள் என்று ராணுவமே பொத்தாம்பொதுவாக தலையசைத்து பிரச்சினையை முடித்து வைத்துள்ளது.

திருநாவுக்கரசு எம்பி