Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சோழவந்தான்-கோரமில்லாமல் நடந்த கிராம சபை கூட்டம்

மதுரை, சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சியில், நேற்று நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் 20-க்கும் குறைவான நபர்கள் கலந்து கொண்டதால், அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்
ததுடன், இது போன்று கோரமில்லாமல் கிராம சபை நடைபெற்றால்  கூட்டத்தை ரத்து செய்ய நேரிடும் என,
 எச்சரித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்திற்கு, ஒன்றியக் கவுன்சிலர் வரவில்லை…
வார்டு உறுப்பினர்களில் இரண்டு நபர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
பொதுமக்கள் பனித்தல பொறுப்பாளர்களை சேர்த்து மொத்தம் 30 நபர்களே வந்திருந்தனர்.
இதில், பொது மக்களை 13 நபர்கள் மட்டுமே இருந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அதிகாரி 5000 மக்கள் தொகை உள்ள ஊராட்சியில் குறைந்தது 200 பேராவது வரவேண்டும்
13 நபர்களை வைத்து கூட்டம் நடத்தினால், கிராம சபை கூட்டம் செல்லுமா
என்ற கேள்வி பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது.
தொடர்ந்து, எந்த ஒரு தீர்மானங்களும் வாசிக்காமலும்…
பொதுமக்களிடம் கையெழுத்து வாங்காமலும்….
அவரவர் எழுந்து சென்று விட்டனர்….
இதைப் பார்த்தால் ,கிராம சபை கூட்டம் போல்  இல்லை… எதன் அடிப்படையில் கிராம சபை கூட்டம் நடத்தினார்கள் என்று தெரியவில்லை.. இவ்வாறு பொது
மக்கள் புலம்பிக்கொண்டே சென்றனர்.

-நா.ரவிச்சந்திரன்