திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக ஒன்றிணைைய வேண்டும் முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் சிவகங்கை பாஸ்கரன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிபரபரப்பு பேச்சு.
பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என அதிமுக நிர்வாகி பேசிக் கொண்டி
ருக்கையில், இரண்டு முன்னாள் அமைச்சர்கள் அமைதியாக இருந்ததும் கூட்ட அரங்கில் இருந்தவர்கள் அமைதியாக இருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொண்டர்கள் துணிச்சலோடும் விசுவாசத்தோடும் என்னிடம் சொன்ன கருத்தை தலைமைக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று பணிவோடு தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்ததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைய வேண்டும்.
அதிமுக சார்பில், சோழவந்தானில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் சிவகங்கை பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில், குருவித்
துறையை சேர்ந்த அதிமுக நிர்வாகி ரம்யா நம்பிராஜன் பேசுகையில்,
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், அதிமுக ஒன்றிணைைய வேண்டும் என்று பேசியது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுக சார்பில் சோழவந்தானில் நடைபெற்ற செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், சிவகங்கை பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தொண்டர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறியிருந்த நிலையில்,
குருவித்துறை அதிமுக நிர்வாகி நம்பிராஜன் என்பவர் பேசும்போது :
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், அதிமுக ஒன்றிணைய வேண்டும் இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொண்டர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற கூட்டங்களை நடத்தி தொண்டர்களின் கருத்துக்களை கேட்ட பின்பு பிரிந்து போன நிர்வாகிகளை ஒன்று சேர்க்க வேண்டும். இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் .
அதாவது பிரிந்து சென்றவர்களை சேர்க்கலாமா, வேண்டாமா என்பதை தொண்டர்களின் கருத்தை
கேட்டே முடிவு செய்ய வேண்டும்.
இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் .
இணைந்து செயல்பட்டால் ஒன்று சேர்ந்தால்
கோடி நன்மை என்று சொல்வார்கள் .
பிரிந்தவர்கள் பிறந்தவர்கள் தான் சேர்க்க முடியாது
அது செய்ய முடியாது.
இது செய்ய முடியாது என்று சொல்வது கட்சிக்கு உகந்ததல்ல.
பல நூற்றாண்டு காலம் கட்சிக்கு வழி சேர்க்க வேண்டும் பிரிந்தவர்களை ஒன்று சேர்த்தால் தான் 2026 இல் மக்களுக்கு தொண்டு செய்யும் கட்சியாக கொண்டு சேர்க்க முடியும். அப்படி இல்லை என்றால் எதிர்க்
கட்சிக்கு வாழ்நாள் முழுவதும் அறிக்கை விட்டுக் கொண்டே
தான் செல்ல முடியும்.
எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி இவ்வாறு பேசினார்.
அதிமுக நிர்வாகி பேசிக் கொண்டிருக்
கையில் ,
கூட்ட அரங்கமே அமைதியாக தலை குனிந்த படி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது. அங்கிருந்தவர்கள் மத்தியில் ஒரு வித மன குழப்பத்தை காட்டியது.
இதற்கு பதிலளித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசுகையில் ,
இங்கு கழகத்தின் இரு தொண்டர்கள் பேசுகையில் பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று பேசினர்.
இந்த கழகத்தில் சேர்வதற்கு பிரிந்து
சென்ற எந்த தொண்டனுக்கும் தடை இல்லை எத்தனை
தோல் கோடி தொண்டர்கள் வந்தாலும் அவர்களை சிறப்பு கம்பளம் விரித்து வரவேற்பதற்கு நிர்வாகிகளுக்கு எடப்பாடி யார் உரிமை கொடுத்
திருக்கிறார் .
எடப்பாடி யார் தலைமை குறித்து விவாதிப்பது என்பதோ கருத்து சொல்வது என்பதோ தலைமை பார்த்துக் கொள்ளும் .
இரட்டை இலை மீட்டெடுத்தது கட்சியை மீட்டெடுத்தது தலைமைக் கழகத்தை மீட்டெடுத்தது தொண்டர்களை மீட்டெடுத்தது இன்றைக்கு தமிழகத்தை மீட்டெடுப்பதற்காக மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக போராடிக் கொண்டி
ருக்கிறது. எடப்பாடியார் மட்டுமே,
அவரே எல்லாம் அறிந்தவர் எல்லாம் தெரிந்தவர் அம்மாவின் ஆன்மா அவரை வழி
நடத்திக் கொண்டிருக்
கிறது .
அந்த வழியில் தொண்டர்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் அம்மா வழியில் தான் எடப்பாடியார் கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை எனக்கு முன்னால் பேசிய முன்னாள் அமைச்சர் சிவகங்கை பாஸ்கரன் அவரது பாணியில் உங்களிடத்தில் எடுத்துக் கூறினார். இருந்த
போதிலும், பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற உங்களுடைய கருத்தை நீங்கள் துணிச்சலோடு விசுவாசத்தோடு சொன்ன அந்த கருத்தை மாவட்ட கழகத்தின் சார்பிலே தலைமைக் கழகத்திற்கு கொண்டு செல்கிறோம். என்ற கருத்தை உங்கள் மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply