சோழவந்தான்-ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள்…பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு?

மதுரை, சோழவந்தானின், பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொது மக்களுக்கும் போக்கு
வரத்திற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடங்கியது. நேற்று காலை சோழவந்தான் பேரூராட்சி 1வது வார்டு பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை ஆரம்பித்த நெடுஞ்சாலை துறையினர், தொடர்ந்து, வட்டப்பிள்ளையார் கோவில் ,மருது மகால் ,
அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளி , வடக்கு ரத வீதி, மாரியம்மன் கோவில் சன்னதி, திரௌபதி அம்மன் கோவில் தெரு,
 பெரிய கடை வீதி,  பசும்பொன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிர
மிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். அப்போது,
 பல இடங்களில் பொதுமக்கள் தங்களுக்கு முறையான தகவல் தெரிவிக்கவில்லை என, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, நெடுஞ்
சாலை துறை அதிகாரிகள் வாக்கு
வாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குறிப்பிட்ட
கால அவகாசம் கொடுத்த பின்பு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தொடர்ந்து மேற்
கொண்டனர். இந்த நிலையில், ஒரு சிலர் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை கொடுத்து சிலரது வணிக நிறுவனங்களுக்கு முன்பு உள்ள பட்டா இடங்களையும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி எடுக்கச் சொல்லி வற்புறுத்தி வருவதாக பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, திரௌபதி அம்மன் கோவில் தெரு, வடக்கு ரத வீதி பசும்பொன் நகர் பெரிய கடை வீதி மார்க்கெட் ரோடு ஆகிய பகுதிகளில் அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் தவறான தகவல்களை கூறியும்,
 பட்டா இடங்களை ஜேசிபி மூலம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தி வருவதாக வர்த்தகர்கள் பொதுமக்கள் தெரி
விக்கின்றனர். இது குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் விரைவில் பொதுமக்கள் மற்றும்  சார்பாக மனு கொடுக்க போவதாக தெரி
வித்துள்ளனர். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் சந்தித்து ஆக்கிரமிப்புகளை முறையாக அளந்து எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென, வேண்டு
கோள் வைக்க உள்ளதாகவும், தெரிவித்தனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பட்டா இடங்களில் உள்ள இடங்களை அளந்து ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில் ஆக்கிரமிப்பு உள்ள பகுதிகளை மட்டும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்
கையால் ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்கான வியாபாரங்கள் பாதிக்கப்
பட்டுள்ள நிலையில், அதனை எப்படி சமாளிப்பது என்று வர்த்தகர்கள் கவலை அடைந்துள்ளதாக, தெரிவித்தனர்.

– நா.ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *