நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பாண்டமங்கலம், வெங்கரை, திட்டமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக வட மாநில இளைஞர்கள் சிலர் கிராம பகுதியில் தனியாக உள்ள வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்களுக்கு பாலிஷ் செய்து தருவதாக கூறி அவற்றை வாங்கி ரசாயன கலவையில் நனைத்து பாலிஷ் செய்து கொடுத்துள்ளனர்.
அவ்வாறு பாலிஷ் செய்த தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களின் எடை வெகுவாக குறைந்து உள்ளதை கண்டு அதிர்ச்சி பெண்கள் அடைந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
இதுபோல் கும்பல் இடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கையும் விடப்பட்டது
இந்நிலையில் நேற்று பாண்டமங்கலம் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பவரது மனைவி தாரணியிடம் இரண்டு வட மாநில இளைஞர்கள் வெள்ளி கொலுசிற்க்கு பாலிஷ் போட்டு தருவதாக வாங்கி ரசாயன கலவை கலந்த திரவத்தில் நனைத்தெடுத்துள்ளனர்.
அப்போது வெள்ளி கொலுசு எடை பாதியாக குறைந்ததைக் கண்ட தாரணி சுதாரித்துக்கொண்டு கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.
உடனடியாக அப்பகுதியினர் வட மாநில இளைஞரை பிடித்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் தர்ம அடி கொடுத்து பரமத்திவேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலம் சுபவுள் மாவட்டத்தைச் சேர்ந்த பங்சவிசாஹ் மகன் ரவிக்குமார்(33) என்பதும் அதே பகுதியைச் சேர்ந்த பைஷோ ஷாக் என்பவரது மகன் தருண்குமார் (28) என்பதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாரேனும் உள்ளனரா என பரமத்தி வேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
– கௌரிசங்கர்
Leave a Reply