Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மதுரை-விதிகளை மீறி இயக்கப்படும்ஆட்டோக்களால் பொதுமக்கள் அவதி

மதுரை மாநகரத்தில் பல இடங்களில் ஷேர் ஆட்டோக்கள் சிட்டி பஸ் போல செயல்படுகிறது என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டத்தில்
ஒரு பல இடங்களில் ஷேர் ஆட்டோக்கள் பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி போக்குவதற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை நகரில் அண்ணா நிலையம், அண்ணா நகர், மாட்டுத்தாவணி, சிம்மக்கல் ,
புதூர், திருநகர், வண்டியூர், கருப்பாயூரணி, உள்ளிட்ட பல இடங்களில் பஸ் நிறுத்தம் அருகே ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பஸ்களில் பயணம் செய்ய முடியாதபடி, பொது
மக்களுக்கும் போக்குவரத்துக்கும், தொடர்ந்து இடையூறு ஏற்படுத்து வருகின்றனர். இது குறித்து, மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் போக்குவரத்து ஆய்வாளர், ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றும் கூட, போலீஸார்கள் கண்டும் காணாமல், இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தலையில் ஹெல்மெட் இல்லாமல், செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை பாய்ந்து பிடிக்கும் போலீசார், மதுரை நகரில் விதியை மீறும் செயல்படும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த தயக்கம் காட்டுவது ஏன் என, சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர். மேலும், மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட்
அருகே பஸ் நிறுத்தத்தில் வரிசையாக ஆட்டோக்கள் நிறுத்திக் கொண்டு, இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் செல்ல முடியாதபடி, போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர். அதன் அருகே காவல் பூத்து இருந்தும், போலீசார்கள் அதை கட்டுப்படுத்த தவறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை அருகே, சோழவந்தானில் மாரியம்மன் கோவில்
 ஸ்டாப் ஆகிய பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்களை சாலையை மறித்து நிறுத்தி உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து, சோழவந்தான் காவல் ஆய்வாளர், சமயநல்லூர் காவல் துணை கண்
காணிப்பாளர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில், சிட்டி சிட்டி பஸ்கள் போல செயல்படும் ஆட்டோக்களை ஏன்,  வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அனுமதிக்கின்றன தெரியவில்லை என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே ,
தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதுரை மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

– நா.ரவிச்சந்திரன்