Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மதுரை-கோயில்களில் சரஸ்வதி பூஜைசிறப்பு அலங்காரம்

மதுரை அண்ணா நகர் தாசிலா நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், சரஸ்வதி பூஜை முன்னிட்டு, இக்கோயில் உள்ள விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இத்
திருக்கோவிலில், நவராத்திரி முன்னிட்டு அம்பாள் தினசரி மாலை சிறப்பு அலங்காரங்களில் காட்சியளித்தார். பக்த கோடிகள், துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தனர் .
இதை அடுத்து, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து, பக்தர்களுக்கு பிர சாதங்கள் வழங்கப்பட்டன.
இதே போல, பட்டிவீரன் பட்டி மாரியம்மன் ஆலயத்திலும், மதுரை அண்ணா நகர் யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்திலும், மதுரை தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்திலும், மதுரை கோமதிபுரம் ஞான சித்தி விநாயகர் ஆலயத்திலும், சோழவந்தான் சிவன் ஆலயத்திலும், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் ஆலயத்திலும், ஜனக நாராயண பெருமாள், தென்கரை மூலநாதர் சுவாமி, திருவேடகம்
ஏடக நாத சுவாமி ஆலயத்திலும், சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

– நா.ரவிசந்திரன்