பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுமத்தூர் ஊராட்சியில் முருக்கங்குடி tஷீ காருகுடி செல்லும் தார் சாலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டும் குழியுமாக தார் சாலை இருப்பதால் மழைக்காலங்களில் மழை நீரா தற்சாரிலுள்ள குட்டையில் நீர் நிரம்பி குளம் போல் காட்சி அளிக்கின்றது இதனால் இப்பகுதியில் செல்லும் நான்கு சக்க வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் சொல்லும் பொழுது மிகச் சிரமத்திற்கு ஆளாகின்றது மேலும் தார் சாலையில பொதுமக்கள் நடந்து செல்லும் போது நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தண்ணீர் மோதி நடந்து செல்பவர்கள் மீது அடித்து செல்லும் அவல நிலை ஏற்படுகிறது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தார் சாலை இதே நிலை காணப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.இவ்வழியாக அரசு பேருந்துகளும் தனியார் பள்ளி பேருந்துகளும் செல்வதற்கு மிக சிரமப்படுகின்றன மேலும் அவசர உதவிக்காக முருக்கன்குடி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்வதற்கும் சிரமப்படுகின்றனர் எனவே ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட தார் சாலையினை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று தார் சாலை சரி செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.மேற்கண்ட பகுதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
– ஆர். வடமலை
Leave a Reply