வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரணாம்பட்டு கே.வி.குப்பம் பகுதிகளில் மனித சமூகத்தையே சீரழிக்கும் கரையான்களாக கள்ளச்சாராயம், டாஸ்மாக், போலி மதுபான விற்பனை ,காட்டன், லாட்டரி,கஞ்சா போன்ற மனித சமூகத்தின் கொடிய நோய்களான இவை அனைத்தும் வேலூர் மாவட்டத்தில் மிக வேகமாக பரவி வருவது மக்களின் வறுமைக்கும் தற்கொலைக்கும் இடமாற்றத்திற்கும் மிகப்பெரும் காரணியாக இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒரு உண்மையாகும். லஞ்சம் ஊழல் ஆகிய இரண்டும் இந்திய வாழ்வில் பிரிக்க முடியாத அம்சங்கள் ஆகி வெகுகாலம் ஆகிவிட்டது. இன்று எண்ண முடியாத கோடிகளில் ஊழல்கள் இன்று நிகழ்ந்து வருகின்றன.
மானுட சமூகத்தின் பாதுகாப்பிற்கும் நலனுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அரசும் ,அரசு நிர்வாகமும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது .அந்தவகையில் குற்றவியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டிய வேலூர் மாவட்ட காவல்துறை மேல் மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை தங்களின் சுயநல சுகபோக வாழ்விற்காக அத்தனை சமூக விரோத செயல்களையும் கட்டவிழ்த்து விட்டுவிட்டு, ஆண்ட கட்சியின் அரசியல்வாதிகளும் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகளும் ஆட்டிப்படைகின்ற ஒரு போலியான நிர்வாகத்தை மக்களிடையே காட்டி வருகிறன்றனர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கட்டுப்பாடற்று புரையோடிப்போன சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
பேரணாம்பட்டு சாத்கர் மலையில் உருவாகும் சாராய ஆறானது கிளை ஆறுகளாக பேரணாம்பட்டு முழுமைக்கும் பாய்கிறது. அதோடு குடியாத்தம் ,கே.வி.குப்பம் என தினசரி கள்ளச்சாராயம் படுவேகமாக விற்பனை செய்யப்படுவதால் இதனால் தினசரி ஆயிரக்கணக்கான ஏழை கூலித் தொழிலாளர்கள் தங்கள் உடல் நலத்தை இழப்பதுடன் குடும்ப வருமானத்தை இழந்து ஏதுமற்ற ஏதிலிகளாக தற்கொலை செய்துகொள்வதும், மனைவி பிள்ளைகள் குடும்பம் என சிதறி சிதறுண்ட நெல்லிக்காய்களாக ஆங்காங்கே உறவுகளை இழந்து அல்லல்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. அதேபோல் குடியாத்தம் கொட்டாரமடுகு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சா ஆனது இன்றைக்கு வேலூர் மாவட்டம் முழுமைக்கும் படித்து வேலையற்ற இளைஞர்களின் வருமானத்தின்உச்சமாக இருப்பதால், குடியாத்தம் பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் வரை தற்போது கஞ்சா புகை பழக்கம் அதிவேகமாக மாணவச் செல்வங்களை பெரிய அளவில் பாதித்துள்ளது.
இதேபோல் பீடி ,நெசவு கூலித் தொழிலாளர்களை ஆட்டிப்படைக்கும் அதிர்ஷ்டம் என்ற மோகத்தின் மோகினியாக விளங்கும் மூன்று நம்பர் லாட்டரி, காட்டன் ,தொழிலில் தங்கள் வாழ்வு ஒரு மாலைப் பொழுதிலேயே தங்களது ஆசைகள் நிறைவேறி விடும் என்ற நம்பிக்கையில் தினசரி தங்களது உழைப்பின் ஊதியத்தை லாட்டரியில் முதலீடு செய்து ஏமாந்து கடனாளிகளாக ஆகி தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் தற்போது குடியாத்தம் பகுதிகளில் மிகவேகமாக நடந்தேறி வருகிறது. அதேபோல் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள கடை எண், விலைப்பட்டியல் இல்லாத அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் போலி மதுபான விற்பனை செய்வதும், திறந்தவெளியில் விடியற் காலை 5 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 11 மணி வரை மனிதர்களை சீரழிக்கும் மிக மோசமான குடிப்பழக்கம் இங்குதான் தினசரி பல ஆயிரம் அரசு ஊழியர்களை வேலைக்கு செல்லும் தொழிலாளர்களையும் பலி வாங்கி வருகிறது .இங்கு மதுவுக்கு அடிமையான அரசு ஊழியர்கள் காலை அலுவலகம் செல்லும் முன்பாக போதை ஏற்றிக் கொண்டு செல்வதும் பகலெல்லாம் உழைத்த உழைப்பின் ஊதியத்தை கூலித்தொழிலாளர்கள் உடல்வலி என்ற போர்வையில் மருந்து மாத்திரைகளுக்கு பதிலாக தினசரி தங்கள் ஆயுளை குறைக்கும் மதுவை ஊற்றிக் கொண்டு குடும்பங்களை சீரழிக்கும் கண்ணெதிரில் நடைபெற்றுவரும் தினசரி குற்றவியல் செயல்களாகும். செய்தியில் குறிப்பிட்டுள்ள குற்றச் செயல்கள் அனைத்தும் மாவட்ட காவல்துறைக்கு காவல் கண்காணிப்பாளராக உள்ள செல்வகுமார் அவர்களுக்கு தெரியாதா?? தெரியாது எனில் இந்த செய்தியின் மூலம் மாணவ சமூகத்தையும் மனிதகுல வாழ்வையும் சீரழித்து வரும் மிகக்கொடிய செயல்களான கள்ளச்சாராயம், கஞ்சா, காட்டன் ,லாட்டரி இவைகளின் போக்கிடம் குறித்த தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரியப்படுத்தாமல் உள்ள துறைசார்ந்த அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து பொறுப்பேற்றுக்கொண்ட அரசுப் பணியின் கடமைக்கும் மனசாட்சிக்கும் நன்றி உணர்வுடன் ஓரளவாவது வேலூர் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் கள்ளச்சாராயம் கடைகள் 189 இடங்களிலும், காட்டன் வாட்டரி 40க்கும் மேற்பட்ட இடங்களிலும், கஞ்சா விற்பனை பள்ளி கல்லூரிகள் இருக்கும் இடங்களிலும் என பேரணாம்பட்டு குடியாத்தம் கே.வி.குப்பம் பகுதிகளில் சமூக விரோத செயல்கள் தடையில்லாமல் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற குற்றங்களை தடுத்திடுவார்களா? குடியாத்தம் மக்களோடு நாமும் காத்திருக்கிறோம்.
Leave a Reply