காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர்,ஆலந்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு தொகுதியில் கூட கடந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறவில்லை.
மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தற்போது மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். ஜெயலலிதா ஆட்சியின் போது சோமசுந்தரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். பின் அவர் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு பதில் வாலாஜாபாத் கணேசன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அதிலிருந்து அவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக இருந்தனர். இருவருக்கும் தனி ஆதரவாளர்கள் இருந்தனர். அப்போது கணேசன் ஆதரவாளர்களான தற்போது மாவட்ட பொருளாளர் வள்ளி விநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சின்ன சோமு ஆகியோர் இருந்தனர்.
கடந்த ஆட்சியின் போது சின்ன சோமு தன் மனைவிக்கு காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் தலைவர் பதவி வாங்கி கொடுத்தார்.
வள்ளி விநாயகம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வைத்தார். அத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மேயர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
அப்போது நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தன் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட வில்லை என்ற புகார் எழுந்தன.
காரணம் என்ன என்று விசாரித்ததில் எதிர் கட்சியாக இருக்கும் போது வள்ளி விநாயகம் மனைவி வெற்றி பெற்று மேயராக வந்து விட்டால் தன் செல்வாக்கு குறைந்து விடும். பின் எம்.எல்.ஏ., சீட் கேட்பார். என நினைத்து அவ்வாறு செயல் பட்டதாக அக் கட்சியினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாநகராட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று மேயர் பதவியை தட்டிப் பறித்தது. பின் கணேசனை மாற்றி சோமசுந்தரம் மாவட்ட செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
மேலும் மாமன்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் மன்ற கூட்டத்திற்கு முன் மாவட்ட செயலாளரை அனுகி என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று ஆலோசனை கேட்க வில்லை. அவரும் அவர்களை கண்டு கொள்ள வில்லை.
மாமன்றத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் எதுவும் மாவட்ட செயலாளர் நடத்த வில்லை. இதனால் எதிர் கட்சியாக இருக்கும் அதிமுக இப்படி மவுனமாக இருக்கிறதே என பொது மக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்தது.
இதனால் விரைவில் சோமசுந்தரம் மாற்றப்படுவார் என கட்சியினர் தெரிவித்தனர். கட்சி மேல் இடத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருந்ததால் மாவட்ட செயலாளர் பதவி தப்பியாக கட்சியினர் தெரிவித்தனர்.
அப்போது கணேசன் மாவட்ட செயலாளர் பதவியை கைப்பற்ற முயற்சி செய்து மேலிட பொறுப்பாளர்களை அனுகியுள்ளார். தற்போது உள்ள மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்யும் முடிவை கட்சி மேலிடம் கைவிட்டது.
கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட ராஜசேகருக்கு மாவட்ட செயலாளர் சரியான ஒத்துழைப்பு கொடுக்க வில்லை. என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
மற்றும் காஞ்சிபுரம் திமுக மேயர் மகாலட்சுமிக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்தது. இதில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் பலர் மேயருக்கு எதிராக இருந்தனர்.
ஆனால் அதிமுக வை சேர்ந்த 37வது வார்டு உறுப்பினர் வேலரசு 47 வது வார்டு உறுப்பினர் பிரேம்குமார் 20 வது வார்டு உறுப்பினர் அகிலா ஆகியோர் மேயருக்கு ஆதரவாக கையொப்பம் இட்டனர். இச்சம்பவம் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து சோமசுந்தரம் காஞ்சிபுரத்தில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் பேசும்போது திமுக மேயருக்கு ஆதரவாக செயல் பட்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்?
என பேசினார்.
இவ்வாறு அவர் செயல்பாடு இருந்ததால் கட்சி மேலிடம் அவரை மாற்றம் செய்து விடும் என எதிர்ப்பாளர்கள்
குஷியாக இருந்தனர்.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருகிறது. அதற்கு முன்னதாகவே தேர்தல் வேலைகளை துவக்க வேண்டும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்நேரத்தில் மாவட்ட செயலாளர்களை மாற்றினால் சிக்கல் ஏற்படும். என கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட பொது கூட்டததிற்கு சிறப்பான ஏற்பாடு செய்து மாவட்ட செயலாளர் பதவியை சோமசுந்தரம் தக்க வைத்துக் கொண்டதாக கட்சியினர் தெரிவித்தனர்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் சோமசுந்தரம் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
ஏன் என்றால் உத்திரமேரூர் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. சுந்தருக்கு அடுத்த தேர்தலில் சீட் கிடைக்காது என கூறப்படுகிறது. இதனால் சோமசுந்தரம் அங்கு போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என நினைத்து தற்போது காய் நகர்த்தி வருகிறாராம்.
அதேபோல் கணேசன் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட அதற்கான வேலைகளை செய்து வருவதாக அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.
ஜெயலலிதா இருந்த போது கூட்டணியை எதிர்பார்க்காமல் தனித்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். அந்நிலை தற்போது கிடையாது.
நடிகர் விஜய் கட்சி மாநாட்டிற்கு பின் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்த்து கொள்ள பல கட்சியினர் சிவப்பு கம்பளம் விரித்து காத்திருப்பதாக தெரிகிறது. அதே நிலையில் அதிமுகவும் எதிர்பார்த்து இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
– மாசிலாமணி
Leave a Reply