மதுரை, சோழவந்தானின், பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக போக்குவரத்து சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்
பள்ளி முன்பு ஆளை விழுங்கும் வகையில் பள்ளங்கள் உள்ளதால், பள்ளி செல்லும் மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள இந்த பகுதியில் வாகனங்கள் பள்ளங்களில் விழுந்து செல்லும் போது விபத்துகள் ஏற்பட்டு காயங்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்
கின்றனர்.
இதே போன்று, சோழவந்தான் அருகே தச்சம்பத்து பேருந்து நிறுத்தம் அருகில் பெரிய அளவில் இரண்டு இடங்களில் பள்ளங்கள் உள்ளதும் விபத்து ஏற்படுவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் வாகனத்தில் செல்பவர்கள் கூறுகின்றனர். இதே போன்று, மன்னாடி மங்கலம் பகுதிகளிலும் சாலையில் ஆங்காங்கே பெரிய பெரிய பள்ளங்கள் இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் குறிப்பாக இரவு நேரங்களில் பள்ளங்கள் தெரியாமல் வாகனங்களில் செல்வர்கள் விழுந்து செல்வதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். நெடுஞ்சாலை துறையினர் பொது
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சோழவந்தான் மற்றும் கிராம பகுதி சாலைகளில் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள தற்காலிக பள்ளங்களை
சரி செய்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply