திருவள்ளூர்- கமிஷன் கலெக்சன் கரப்ஷன்… மாதிரி பள்ளிக்கு கட்டமைப்பும்… இல்லை பாதுகாப்பும் இல்லை.

திருவள்ளூர்-
கமிஷன் கலெக்சன் கரப்ஷன்…
மாதிரி பள்ளிக்கு கட்டமைப்பும்… இல்லை பாதுகாப்பும் இல்லை.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 150 பேர் மட்டுமே மாதிரி பள்ளியில் பயின்று வருகின்றனர். போதிய கட்டமைப்பு இல்லாததாலும் மாணவ மாணவிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தராததாலும் மாணவர்கள் சேர்க்கை 150 பேர் மட்டுமே மாதிரி பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர். ஏழை எளிய மக்கள் பயன் பெறுகின்ற வகையில் மாதிரி பள்ளி செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு மாநில அரசு செயல்பட்டதை திருவள்ளூர் மாவட்டமோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னலமே மாணவர்கள் நலம் என்று மாவட்ட கல்வித்துறை செயல்பட்டு வருகின்றது இதனால் 150 பேர் மட்டுமே பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர்கள் மாதிரி பள்ளிக்கு ஒன்பதாம் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளை தேர்வு செய்து அனுப்புவதில்லை இதற்கு காரணமே மாதிரி பள்ளிக்கு கட்டமைப்பும் இல்லை பாதுகாப்பும் இல்லை அனைத்து அடிப்படை வசதிகளும் இல்லாததால் மாணவ மாணவிகள் சேர்க்க முடியாத அவல நிலையை மாதிரி பள்ளி நிர்வாகமே ஏற்படுத்தி உள்ளது மாதிரி பள்ளியின் தலைமை ஆசிரியர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு விளம்பரப் படுத்திக் கொண்டும் சர்வதிகாரப் போக்கில் அனைத்து வகையிலும் செயல்படுவதால் மாணவர்களின் நலனில் அக்கறை காட்டாமல் தன்னலம் மட்டுமே கொண்டு செயல்பட்டதால் மாணவர்கள் தரம் மோசமான நிலையில் இருந்து வருகின்றது மாதிரி பள்ளியின் நோக்கமோ இதில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வு ஜே இ இ தேர்வு மருத்துவ துறை பொறியியல் துறை மேலும் உயிர்கல்வி கற்கவும் மேற்படிப்பு படிக்கவும் அனைத்து வசதிகளும் அரசே முன்வந்து செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கின்ற சூழ்நிலையில் திருவள்ளூர் மாவட்ட மாதிரி பள்ளி நிர்வாகம் மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடமைக்காகவும் செயல்படுத்த வேண்டுமே என்ற நோக்கத்தில் மாதிரி பள்ளியை செயல்படுத்தி வருகின்றனர் சமீபத்தில் மாதிரி பள்ளி கூடத்திற்காக மூன்று கோடி நிதி மாநில அரசு பள்ளிக்கல்வித்துறை வழங்கியது ஒரு கோடி என்பது லட்சம் குளியல் அறை கழிப்பிடம் உணவு கூடம் கட்டுமான பணிகள் இன்று வரை முழுமை பெறவில்லை இதனால் மாணவ மாணவிகள் பெருத்த அவலங்களை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர் மாணவிகள் தங்கும் விடுதிகளுக்காக ஒன்றரை லட்சம் வாடகைக்கு அறை கூடம் எடுக்கப்பட்டது அங்கும் மாணவிகள் ஒரே அறையில் சுகாதார வசதிகள் இன்றி தங்குகின்ற அவல நிலை இன்று வரை நீடித்து வருகின்றது

மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் நாள்தோறும் தங்கள் இன்னல்களையும் குமுறல்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர் மாவட்ட கல்வித்துறை மாவட்ட நிர்வாகமும் இதுவரைக்கும் எந்த  ஒரு ஆய்வையும்  மேற்கொள்ளவில்லை மாணவர்களின் நலனின்  அக்கறை செலுத்தவில்லை சமீபத்தில் மாதிரி பள்ளி உறுப்பினர் செயலர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு சேர்க்கை விகிதத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் பேசினார் அவரோ மாவட்டத்தில் நடைபெறும் தண்டரைப் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாத சுகாதாரம் இல்லாத மாதிரி பள்ளியை ஒருமுறை கூட பார்வையிட்டதும் கிடையாது ஆய்வை மேற்கொண்டதும் கிடையாது இந்த நிலையில் மாதிரி பள்ளி திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மாதிரியாக  செயல்பட்டு வருகின்றது ஏற்கனவே தண்டரை அரசு மேல்நிலைப்பள்ளி குறைந்த மாணவர்கள் படித்து வருகின்ற சூழ்நிலையில் இந்த மாணவர்களும் அங்கே படிக்கின்ற சூழ்நிலையால் அவர்களுக்காக ஒதுக்கிய ஆய்வுக்கூடத்தை மாதிரி பள்ளி மாணவர்கள் எடுத்துக் கொண்டதால் ஒரு நாள் கூட ஆய்வு கூடத்தை தண்டரை மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகின்றது மாதிரி பள்ளி இடமாற்றத்தால் தண்டரை பள்ளி மாணவ மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் மாதிரி பள்ளி மாணவர்கள் கல்வி தரம் உயர்ந்துள்ளதா என்று கேள்விக்குறியும் எழுந்துள்ளது 640 பேர் மாணவ மாணவிகள் மாதிரி பள்ளியில் படிக்க வேண்டிய சூழ்நிலையில் 150 பேர் மட்டுமே படிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதை எதை பற்றியும் கவலைப்படாத கல்வித்துறை கமிஷன் கலெக்சன் கரப்ஷன் மாதிரி பள்ளி மாதிரி பள்ளியை ஒரு மாதிரியாகவே கடந்த மூன்று வருடங்களாக நடத்தி வருகின்றது மாணவர்களின் தரமும் அனைத்து மாவட்டங்களை விட மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டு இருக்கின்றது எதற்காக மத்திய மாநில அரசு மாதிரி பள்ளியை  எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் முற்றிலுமாக தோல்வியை கண்ட மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தை கொண்டு வந்த பெருமை உறுப்பினர் செயலர் சுதன் தான் காரணம்இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி மேல்மட்டம் முதல் கீழ் மட்டம் வரை எங்கும் ஊழல் எதிலும் ஊழல்  என்ற அடிப்படையில் செயல்பட்டதால் கல்வியை கொண்டு அடுத்து ஊழல்களும் அரங்கேற்றம் செய்தது மாதிரி பள்ளி நிர்வாகம் கல்வி சுகாதாரம் பாதுகாப்பு அடிப்படை வசதிகள் உணவு உறைவிடம் உபகரணங்கள்அனைத்தும் கேள்விக்குறியாக மாதிரி பள்ளி விளங்குகின்றது உடனடியாக மாதிரி பள்ளியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தும் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து மாணவ மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்தியும் மோசமான அளவில் உள்ள சேர்க்கை எண்ணிக்கையை அதிக அளவில் உயர்த்தி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்தி மற்ற மாவட்டங்களை போன்று முழு அளவில் மாணவர்கள் சேர்க்கையை உருவாக்க வேண்டும் தரமான ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் மோசமாக செயல்படும் மாதிரி பள்ளியை சீர்படுத்தி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு ஏழை எளிய மாணவர்களுக்கு தரமான உயிர்த்தருமான கல்வியை மாதிரி பள்ளி வழியாக வழங்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? நீதிமன்ற வழக்கில் உள்ள மாதிரி பள்ளியை மீட்பாரா??

– கே.ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *