Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சோழவந்தான்-அரசு பள்ளி ஆசிரியர் மீதுதவறான பாலியல் புகார்….மாணவ-மாணவிகள் போராட்டம்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த நிலையில் இந்தப் பள்ளியில் விக்கிரமங்கலம் கிராமத்தினர் சார்பாக மூர்த்தி என்பவர் தற்காலிக ஆசிரியராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார

இந்த நிலையில் சோழவந்தான் அருகே தாமோதரன் பட்டி கிராமத்தில் இருந்து பிளஸ் ஒன் வகுப்பில் இந்த ஆண்டு சேர்ந்த பிரீத்தி என்ற மாணவி ஆசிரியர் மூர்த்தி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை புகார் அளித்திருந்தார்

இந்த நிலையில் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் மூர்த்தி ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை அவர் மீது தவறான புகார் அளிக்கப்பட்டுள்ளது ஆகையால்  மதுரை மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு நேரில் வந்து இதுகுறித்து மாணவ மாணவியரிடம் உரிய முறையில் விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி முடிந்த பின்பு பள்ளி வளாகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கூறுகையில் ஆசிரியர் மூர்த்தி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பள்ளியில் மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார் இவரால் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக 100% பள்ளி சென்டம் வாங்கியது இதை பிடிக்காத சிலர் அவர் மீது தவறான புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட வருகின்றனர் மூர்த்தி ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை அவரை உடனடியாக பள்ளியில் பணி புரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பள்ளியில் உரிய விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மாணவ மாணவிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

– நா.ரவிசந்திரன்