காவேரிப்பட்டினத்தில் அழைப்பிதழில் தனது பெயரை போட வில்லை என்று உணவுத்துறை அமைச்சரும் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளருமான சக்கரபாணியிடம். உரிமையோடுகேட்ட நகர செயலாளரின் பதவி பரிதாபமாக பறிபோனது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் நகர செயலாளராக ஜே கே எஸ் பாபு என்பவர்கடந்த 10 வருடங்களாக திமுக நகர செயலாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வாரம் காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கே எம் சரேயு. தலைமை வகித்தார்.
உணவுத்துறை அமைச்சரும் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளருமான சக்கரபாணி .திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் பர்கூர் எம்எல்ஏவுமான
மதியழகன்.
உள்ளிட்ட ஏராளமான அரசுத்துறை அதிகாரிகள் திமுகவினர் பங்கேற்றனர்.
விழாவில் ஜே கே எஸ் பாபு அழைப்பிதழ் தனது பெயரை குறிப்பிடவில்லை எனவும் விழாவில் தனது பெயரை கூறவில்லை எனவும் உரிமையோடு அமைச்சர் சக்கரபாணியிடம் கூறினார்.இதையடுத்து திமுகவினரும் அமைச்சரும் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
விழாநடந்த மறுநாளே ஜே கே எஸ் பாபுவின் தம்பி சாதிக் என்பவரை நகர செயலாளராக திமுகமெலிடம் திடீரென நியமித்துள்ளது.
தனது பெயரை அழைப்பிதழில் போடவில்லை என உரிமையோடு கேட்ட நகர செயலாளர் ஒருவருக்கே இந்த கதியா இதுதான் திராவிட மாடல்ல அரசா
என்ன திமுகவினர் கேள்வி கேட்கின்றனர்.
கட்சிக்காக பத்து வருடம் தன் சொந்த தொழிலில் விட்டு உழைத்து
ஓடாய் போனதனக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள்நிலை என்ன என்று கூறி வருகிறார் ஜே கே எஸ் பாபு.
– ஜெயசேனை
Leave a Reply