Save 20% off! Join our newsletter and get 20% off right away!

உசிலம்பட்டி-உலக அளவிலான பாரா திறன் விளையாட்டு போட்டி..பதக்கங்களை வென்ற இளைஞருக்கு, வரவேற்பு!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வளையப்பட்டியைச் சேர்ந்த
அருண்
என்ற இளைஞர் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற மாற்றுத்
திறனாளிகளுக்கான உலக அளவிலான திறன் விளையாட்டு போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று குண்டு எறிதலில் வெள்ளி பதக்கமும்,
வட்டு எறிதலில் வெண்கல பதக்கமும் வென்றார்.
பதகங்களை வென்று
சொந்த
 ஊரான உசிலம்பட்டிக்கு வந்த வருணுக்கு அவரது, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பட்டாசு வெடித்து மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கிராமப்புற பகுதியிலிருந்து உலக அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று பதக்கங்கள் வென்று வந்த இளைஞருக்கு கிராம மக்கள் மட்டுமல்லாது பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

– நா.ரவிச்சந்திரன்