Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சோழவந்தான்-நடுமுதலைக்குளம் கிராமத்தில்மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி

சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம்முதலைக்குளம் ஊராட்சி  நடுமுதலைக்குளம் கிராமத்தில் மாநில அளவில் ஆண்கள் மற்றும்பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இதில் இரண்டு நாட்கள் பெண்களுக்கான கபடி போட்டி,இதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஆண்களுக்கான கபடி போட்டிநடைபெற்றது. இந்த போட்டியினை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், மாவட்ட துணை சேர்மன் முத்துராமன்,தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாநில கௌரவ தலைவர் எம்பி.ராமன், ஒன்றிய கவுன்சிலர் அரவிந்த் ஆகியோர்  தொடங்கி வைத்தனர். நடுமுதலைகுளம் 18ம் படியான் கருப்பன கபடி குழு மற்றும் ஜல்லிக்கட்டு நண்பர்கள், விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெண்களுக்கான போட்டியில் 11 அணியினரும், ஆண்களுக்கான போட்டியில் 80 அணியினரும் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கபடி வீரர்கள் போட்டியில் பங்கு பெற்றனர். முதலைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபாண்டி,சேர்மன் ஜெயக்குமார், கவுன்சிலர் ஓம் ஸ்ரீ முருகன், பார்வர்ட் பிளாக் மாவட்ட இளைஞரணி செயலாளர் எல்எஸ்பி.விக்னேஷ் ஆகியோர்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். பெண்கள் அணியில் முதல் பரிசு  மணி வாட்டர் பெண்கள் கல்லூரி,  பாத்திமா கல்லூரி லேடி டோக் கல்லூரி, மீனாட்சி கல்லூரி,அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று பரிசுப் பொருட்கள் மற்றும் வெற்றி கேடயம் வழங்கப்பட்டது. முதலைகுளம் கிராமம் விழாகோலாகலமாக காட்சியளித்தது. இதில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் கபடி ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நடு முதலைக்குளம் பதினெட்டாம்படியான் கருப்பணசாமி கபடி குழு, ஜல்லிக்கட்டு நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நான்கு நாட்கள் கபடி போட்டி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

– நா.ரவிச்சந்திரன்