Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மதுரை-மகளிர் குழுக்களை மிரட்டி,பணம் பறிக்கும் கும்பல்

மதுரையில் மகளிர் குழுவினரை மிரட்டி பணம் பறிக்கும் போலி என்.ஜி.ஓ ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இது பற்றி கலெக்டரிடம் மனு அளித்த மகளிர் குழுவைச் சேர்ந்த ரத்தினம்  கூறியதாவது, நாங்கள் நடத்தி வரும் ரயனா,  இரட்டை விநாயகர்,  தங்க புஷ்பம்,  வளர்பிறை,  சாய்பாபா போன்ற மகளிர் குழுக்களின் மீது பொய்யான தவறான தகவல்களை கே.புதூரை
சேர்ந்த,  என்.ஜி.ஓ.க்கள் என கூறிக் கொண்டு போலி  ஏஜெண்டுகளாக செயல்படும் உஷா,  உஷாவின் கணவர் ஐசக், புவனேஸ்வரி,  எச்.எம்.எஸ் காலனியை சேர்ந்த கௌரி, சேர்மலட்சுமி மற்றும் இவர்களுக்கு உதவி செய்து வரும் ஆடிட்டர் பி.பி.குளத்தைச் சேர்ந்த சுதர்சன் ஆகியோர் எங்களது  குழுக்கள் மீது பொய்யான தகவல்களை பரப்பி எங்களுக்கு லோன் கிடைக்க விடாமல் செய்வது வருகின்றனர். அது  மட்டுமல்லாமல் மிரட்டி பணம் கேட்டு நூதன முறையில் மோசடி செய்து வருகின்றனர்.  இவர்கள் மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வியாபார நோக்கத்துடன் உரிய அனுமதி பெறாத என்.ஜி.ஓ மற்றும் என்.ஜி.ஓ ஏஜெண்டாக செயல்படும் இவர்கள் அனுமதி பெற்ற என்.ஜி.ஓ.க்களான  எங்களுக்கு லோன் பெற்றுத் தரும் நேர்மையான அதிகாரிகள், சமூக அமைப்பாளர்களை மிரட்டி வருகின்றனர்.  இது சம்பந்தமாக நாங்கள் எஸ்.எஸ்.காலணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்.  அந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதாரமான மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் கிடைக்க செய்ய வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்

– நா.ரவிசந்திரன்–