பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பாக யூட்யூபர் சவுக்கு சங்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போலீசார் சவுக்கு சங்கரை, கைது ச செய்யும் பொழுது, அவர் தங்கிய அறையில் கஞ்சா இருந்ததாக காவல் துறையினர் அதனை கைப்பற்றி, தேனி போலீசார் ஒரு வழக்கை அவர் மீது பதிவு செய்தனர். இதனடிப்
படையில், சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட சிறப்பு போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அவர் மீது இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் அவரது ஆட்கொனர்வு மனு தாக்கல் செய்தார்.
உச்சநீதி மன்றத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து ஜாமீன் வழக்கக் கோரி சவுக்கு சங்கர் தரப்பு நீதி
மன்றத்தை நாடியது இதனை விசாரணை செய்த, உச்சநீதிமன்றம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்
பட்டதை ரத்து, ஜாமீன் வழங்கி செய்து கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி உத்தரவு வழங்கியது.
மதுரை மத்திய சிறையிலிருந்த வெளியில் வந்த சவுக்கு சங்கர் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் சார்ந்த கருத்துக்களை யூட்யூப் சமூக வலைதளத்தில் பேசி வந்தார்.
இந்நிலையில், நேற்று மதுரை மாவட்டம் நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால், மதுரை
மாவட்ட சிறப்பு போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர்.
– நா.ரவிச்சந்திரன்
—
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply