Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மதுரை-விமானம் மூலம்ஆமை கடத்தி வந்த நபர் கைது:

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் மதுரைக்கு தடை செய்யப்பட்ட 13 ஆமைகளை கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் இருந்து தடை செய்யப்பட்ட 13 ஆமைகளை கடத்தி வந்த இரண்டு பெண்களை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்
இலங்கையிலிருந்து நேற்று மதுரைக்கு ஸ்ரீலங்கன் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை இட்டனர்.
அதில், இரண்டு பெண்கள் தங்களது பெட்டிகளில் தடை செய்யப்பட்ட இந்தோ சீனிஸ் பாக்ஸ் ஆமைகள் 13 எண்ணிக்கையில் கடத்தி வந்தது தெரிய வந்தது மேலும், விசாரணையில் இவர்கள் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சாவித்திரி திருப்பூர் பகுதியைச் சேர்ந்த உஷா (வயது 31)என தெரியவந்தது. இது குறித்து, சுங்கத்
துறையினர் வழக்கு பதிவு செய்து இரண்டு பெண்களையும் கைது செய்து அவர்கள் கடத்திவைந்த ஆமைகளை பறிமுதல் செய்து வனத்
துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மதுரை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட ஆமைகளை இலங்கையிலிருந்து விமானம் மூலம் மதுரை கடத்தி  வந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

– நா.ரவிச்சந்திரன்