உலகப் புகழ்பெற்றசோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கியதன் காரணமாக தபால் துறை சார்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மாதாமஸ் தலைமையேற்று வெற்றிலை தபால் உரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து விழாவிற்கான நிகழ்ச்சி சோழவந்தான் தபால் நிலையத்தில் நடைபெற்றது இதில் சோழவந்தான் வெள்ளாளர்உறவின்முறை சங்க நிர்வாகிகள் சுகுமார், திரவியம், வெற்றிலை கொடிக்கால்விவசாய சங்க தலைவர் திரவியம் மற்றும் மதுரை தபால் துறை உதவி கோட்ட கண்காணிப்பாளர் ரவிராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதில்மதுரை கோட்ட உதவி கண்காணிப்பாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சோழவந்தான் சரக தபால் துறை ஆய்வாளர் மணிவேல் வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், முன்னாள் கொடிக்கால் விவசாய சங்க தலைவர் ராஜ்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்தியபிரகாஷ் கலந்துகொண்டு தபால் உரையை பெற்றுக் கொண்டனர்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply