Save 20% off! Join our newsletter and get 20% off right away!

உசிலம்பட்டி-கிடா முட்டும் போட்டி

உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கிடா முட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றியத்தின் சார்பில் மாபெரும் கிடா முட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து செவளைமறை, கருப்பு மறை, குரும்பை உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 100 ஜோடி கிடாக்கள் பங்கேற்று ஆக்ரோசமாக மோதிக் கொண்டன.
வயது மற்றும் பல் அடிப்படையில் கிடாக்கள் மோத செய்து அதில் அதிகப்படியாக மோதிக் கொள்ளும் கிடா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
சில்வர் அண்டா, பித்தளை அண்டா,  ரொக்கம், கோப்பை உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வெற்றி பெற்ற கிடாவிற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் வழங்கினர்.

– நா.ரவிச்சந்திரன்